தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளை சந்தித்து மோடியின் அமைதி திட்டத்தின் மூலம் உறவை மேம்படுத்த உறுதிப்பாடு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்கவும், உறவு மேம்படுத்தும் என்கின்றார்  அரசியல் நிபுணர்கள்.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மூன்று நாள் கூட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. இதில் பங்கேற்ற நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

மாநாட்டுக்கு இடையே இருவரும் இன்று தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் எல்லையில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா-சீனா உறவு இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இரு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-சீனா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, எல்லை பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புடினை அஜித் தோவல் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மோடியின் அமைதித் திட்டத்தை, அஜித் தோவல் வழங்கியுள்ளார் என்றும், அது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...