விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் கேஸ்சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் முறையை நரேந்திரமோடி அரசு எளிதாக்க விரும்புகிறது. இதையடுத்து வாட்ஸ் ஆப் மூலம் சிலிண்டரை புக் செய்யும்வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த புதியதிட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் முதலில் அமல்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த துறையினர் பல்வேறு கேஸ் ஏஜென்சீக்களை தொடர்புகொண்டு திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பேசிவருகிறார்கள். கேஸ் சிலிண்டரை போன்செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் புக்செய்யலாம். வாட்ஆப் மூலம் புக் செய்யும் திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் புக்கிங் திட்டம் உத்தரபிரதேசத்தை அடுத்து பிற மாநிலங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.