பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது

பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வ கர்மா திட்டத்தை அறிவித்தார். இந்ததிட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடுமுழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.

இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், “பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொதுசேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணை பவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞர்கள்: இந்ததிட்டத்தின் மூலம் குரு – சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேசவிற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்” என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...