தொலைநோக்குச் சிந்தனைகளால் நாட்டை தொடர்ந்துமுன்னேற்றும் அரசாக நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கருத்தரங்கில் அவர் மேலும்பேசியது: மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, 2016-17-ஆம் ஆண்டில் 27 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம்டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் குறைந்த பிரீமியம் செலுத்தி,அதிக பயிர்க்காப்பீடு பெறும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பிருந்த நிபந்தனை தளர்த்தி, தற்போது 33 சதம் பயிர்சேதமடைந்தாலே நஷ்டஈடு பெறலாம்.
நாட்டிலுள்ள 82 நிலக்கரிச் சுரங்கங்களை நேர்மையாக ஏலமிட்டதன் மூலம் ரூ. 3 லட்சத்து 94 ஆயிரம்கோடி வருவாயை மத்திய அரசு பெற்றுள்ளது. மேலும் நேரடியாக மானியம் வழங்கியதால் ரூ. 49,560 கோடி மிச்சமாகியுள்ளது. 7 கோடியே 50 லட்சம் பேருக்கு முத்ராகடன் திட்டம் மூலம் சிறு, குறுதொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்தியஅரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. அதேபோல, தமிழக அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசும் ஒத்துழைக்கிறது.
ஓபிஎஸ் அணிக்கு தாவாமலிருக்க கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம்கொடுப்பட்டதாக தனியார் டிவியில் தகவல் வெளியான விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் இல. கணேசன்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.