தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேத தினத்தையொட்டி (29.10.2024), புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை தொடங்கி வைத்து இருந்தார். சுகாதார சேவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கும் விதமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார். இத்தகைய மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் வழங்கப்படுவதுடன், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ், விரிவான சுகாதார சேவைகளைப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.
2024 அக்டோபர் 29 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 3 வாரங்களுக்கு உள்ளாகவே, ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் பெறுவதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 4,880 மூத்த குடிமக்கள் இலவச சிகிச்சை பெற்றிருப்பதோடு, இதற்காக ரூ.9.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதுவரை வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்திலும் பலன் பெறாத 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமலேயே சிகிச்சைப் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதா அல்லது மத்திய அரசு சுகாதார சேவை போன்ற வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பலன் பெறுவதா என்பதை பயனாளிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தில், மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம். மருத்துவமனை சேர்க்கைக்கு முந்தைய செலவுகளும் இதில் அடங்கும். மருந்துகள், தீவிர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அல்லாத சேவைகள், ஆய்வகப் பரிசோதனைகள், செயற்கை உறுப்புகள் பொருத்துதல், தங்குமிடம் மற்றும் உணவு, தவறான சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் 15 நாட்களுக்கான தொடர் சிகிச்சையைப் பெறும் வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |