குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
"குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி} ஒரு ராஜதந்திரி' என்ற பெயரில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒருபுத்தகம் வெளியிடப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசியதாவது:
பிரதமராகப் பதவியேற்றபோது தில்லியில் எனக்கு ஆதரவுதந்தது பிரணாப் முகர்ஜிதான். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. மனம்திறந்து இதைச் சொல்கிறேன். பிரணாப் முகர்ஜி தந்தையைப் போல என் மீது அக்கறை செலுத்தினார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நான் பிரசாரம் மேற்கொண்டபோது, "அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து விட்டு, கொஞ்சம் ஓய்வெடுங்கள். வெற்றி, தோல்வி வருவதுசகஜம். ஆனால், நமது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டாமா?' என என்னிடம் பிரணாப் அக்கறையாக கேட்டார்.
குடியரசுத் தலைவராக அவர் இதைத்தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவருடைய பணியும் கிடையாது. ஆனால், அவருக்குள் இருக்கும் மனிதம் தான் என் மீது அவரை அக்கறைகொள்ள வைத்திருக்கிறது என்று மோடி பேசினார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.