நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத்தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒருமுன் உதாரணம் என்று கூறினார்.
பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு, “இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான்இருப்பேன். புனிதமான இந்தநாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலுசேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழைஇந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின்குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.
சிறிய கிராமத்தில் இருந்துவந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனதுவாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.” என்று கூறினார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |