முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் – மத்திய அரசு ஒப்புதல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்காக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், ‘ எனது தந்தை இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை. ஜனாதிபதி 4 பேருக்கு இவ்வாறு கூட்டவில்லை என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்., செயற்குழு கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் அப்பாதான் என அவரது நாட் குறிப்பு மூலம் பின்னர் தெரிந்து கொண்டது வேதனையாக இருந்தது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த யோசனை. ஜனாதிபதியாக எனது தந்தை இருந்தபோது, மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார். ஆனால், இரண்டு காரணங்களில் அது நடக்கவில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து சர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக நாங்கள் கேட்காத போதும், அனுமதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் எதிர்பாராத இந்த கருணையால் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அரசு மரியாதையை கேட்கக்கூடாது. அரசே வழங்க வேண்டும் என தந்தை அடிக்கடி கூறுவார். அவரின் நினைவைப் போற்றும் வகையில், பிரதமர் மோடி இதைச் செய்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறேன். அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...