பழங்களை பயன்படுத்தும் முறை

 பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி இவற்றின் சாறுகள் நாம் சோர்வில் இருந்து மீண்டும் சக்திபெற உதவும்.

 

பழச்சாற்றை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கென்று எதாவது முறை இருக்கிறதா என்று கேட்கத் தோன்றும். கண்டிப்பாக ஆம், அதற்கென்று அளவு இருக்கிறது, பொழுது இருக்கிறது. நியதிகளைக் கடைபிடிக்க நிறையபலன், முழுமையான பலன். உதாரணமாக – காலையில் எழுந்ததும் அரை எலுமிச்சம் பழம் 20 கிராம் தேன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும் பிறகு காலை எட்டுமணி முதல் இரவு எட்டுவரை மூன்று மணிக்கு ஒருதடவை வீதம் பழச்சாறு சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு வேலையும் 250 கிராம் என்ற அளவு சாப்பிடவும். பிறகு படிப்படியாக 600 கிராம் வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

பழச்சாறு உடம்பின் ரசாயனத்தில் (Bodychemistry) ஒரு மாறுதலை ஏற்படுத்தும். அதற்காகத் தயங்க வேண்டியதில்லை. நோயுற்றவர்களும் சரி, ஆரோக்கிய மாணவர்களும் சரி, பழச்சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பழச்சாறு இரத்தத்தில் கலந்து புதுத் தெம்பை அளிக்கும். இந்த அற்புதவிளைவை ஏற்படுத்துவது பழங்களில் உள்ள குளுகோஸ் ஆகும்.

சிகிச்சை முறையாக பழச்சாறு அருந்துகிறவர் 30-60 தினங்கள் வரை அவற்றைத் தொடர வேண்டும். பிறகு மற்ற உணவும் உண்ணலாம்.

பழச்சாறு மட்டுமே அருந்தி வரும் காலத்தில் கடினமான வேளைகளில் ஈடுபடக்கூடாது. அது உடம்பில் ஏற்படுத்தும் ரசாயன மாறுதல் காரணமாக தலைவலி, வயிற்றுவழி, உறக்கமின்மை, கடுமையான உடம்பு வலி ஏற்படும். இவை தொடக்க நிலை அனுபவங்கள், போகப்போக சரியாகிவிடும்.

பழச்சாறு சாப்பிடுவதால் விஷப்பொருட்கள், வேண்டாத கழிவுப் பொருட்கள் தாக்கப்பட்டு நாசமடையும். சரீரத்துக்குத் தேவையான கணநீர்கள் உற்பத்தி ஆவதோடு போதிய வெப்பமும் கிடைக்கும்.

பழச்சாறு அருந்துவதை உபவாசமாகக் கடைபிடிப்பவர் ஒருநாளைக்கு ஐந்துமுறை ஒருவேளைக்கு 300 மி.லி. என்ற அளவில் அருந்தி வரலாம். இதனை காலை 7 மணிமுதல் மாலை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும். நல்ல பசி உள்ளவர்கள் சாற்றின் அளவைக் கூட்டிக் கொண்டால் தவறு இல்லை.

பழச்சாற்றை சிகிச்சை முறையாக அனுசரிப்பவர் அந்த நாட்களில் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வேறு எந்த உணவையும் உண்ணலாகாது. 45-6௦ நாட்கள் உபவாசம் இருந்தவர் அதனை நிறைவு செய்யும் நாளில் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகள் மட்டும் பழச்சாறு அருந்த வேண்டும் இடைவேளைகளில் கனிந்த பழம் ஏதேனும் ஒன்றை உண்ணலாம். மறுநாள் பழத்துடன், வேகவைத்த காய்கறி, கீரை சேர்த்துக் கொள்ளலாம். பாலும் பருகலாம். மூன்றாவது நாளில் காய்கறி, பால், அவல் சாப்பிடலாம். நான்காவது நாள் முளை கட்டின பயறுவகைகள் சேர்த்துக் கொள்ளலாம். இப்படியாக உணவு வகைகளை கூட்டிக் கொண்டு விடலாம்!

பழச்சாற்றை மட்டும் அருந்தி வரும் காலத்தில் சில நியதிகளைக் கடைபிடிக்கும்படி இருக்கும்.
மன அமைதியைப் பராமரித்தல்
கடின வேலைகளைத் தவிர்த்தல்
கடினமான உணவுகளைத் தவிர்த்தல்
சராசரி உணவை படிப்படியாக சேர்த்துக் கொள்ளுதல்.

உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், மற்றும் மூலப்பொருட்களில் மாற்றம் உண்டாக்கி தான் மாறாது இருக்கும் சத்துநீர்கள் போன்றவற்றின் அருமையான மூலகம் என்று பழங்களைச் சொல்லலாம். அவை எளிதில் சீரணமாகும், இரத்தத்தை தூய்மை செய்யும், உணவுப்பாதையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான உணவு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கைக்கு மாறான உணவு ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

நன்றி : நரேந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...