பிரதமர் நரேந்திரமோடி குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாவகத் புதன்கிழமை வெளியிட்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி குறித்து சுலாப் இண்டர் நேஷனல் அமைப்பின் தலைவர் பிந்தேஸ்வர் பதாக் எழுதிய 'நரேந்திரதாமோதர் தாஸ் மோடி: தி மேக்கிங் ஆஃப் எ லெஜெண்ட்' என்ற தலைப்புடைய புத்தகம் வெளியிடப்பட்டது. அதை மோகன் பாகவத் வெளியிட்டார்.
அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்புத்தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்து, குஜராத் முதல்வர், பிரதமர் ஆகிய பதவிகளுக்கு பிரதமர் மோடி வந்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்புகளை வகித்த மோடி, முதல்வராவதற்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் தற்போதும் இருக்கிறார். புகழும், விளம்பரமும் அவரிடம் எந்ததாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடினமான பணி, துணிச்சல், பொறுமை, நல்லெண்ணம் போன்ற நற்பண்புகளை கொண்டவர் பிரதமர் .
சாத்தியமில்லாதது எதுவும் கிடையாது என்று நம்புபவர்வர். அதற்காக கடினமாகப் பணியாற்றுவார்.
நாட்டுமக்களுக்கு, தற்போது அவர்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, நரேந்திர மோடி என்ற நல்ல மற்றும் திறமையான ஒப்பந்ததாரர் கிடைத்துள்ளார். இதிலும் ஓர் அபாயம்இருக்கிறது. அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, பிறர் தூங்கச் சென்றுவிடுகின்றனர். இதுபோல் நடக்கக்கூடாது.
பிரதமர் மோடி குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புத்தகமானது, அவர் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மோகன் பாகவத் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.