பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) எனும் ஆங்கிலநூலின் தமிழ் பதிப்பை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டார்.
பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (Exam Warriors) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்கநூல் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.
நூலின் முதல் பிரதியை ஆளுநர் ஆர்.என்.ரவிவெளியிட, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காம கோடி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் துணை ஆணையர்ருக்மணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: பொதுத் தேர்வு எழுதுவதற்கு மட்டுமின்றி உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கும் . பிரதமர் மோடி பல்வேறுகடினமான சூழல்களை கடந்து வந்துள்ளார். அவையே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அவருக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன் விளைவாக நாடு தற்போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் வருங்கால தலைமுறையான உங்கள் கைகளில்தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியே நாட்டையும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். தேர்வைகண்டு பயப்பட வேண்டியதில்லை. முறையாக திட்டமிட்டு படித்தால் வெற்றிபெறலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். குழந்தைகள் வெற்றிபெறுவதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமாகும். வாழ்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிகவும் முக்கியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, ‘‘மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகுறித்த பயம் இருக்கும். அதை கடந்து செல்லஇந்த புத்தகம் உதவியாக இருக்கும்.ஒருதேர்வு உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வாய்ப்புகள் நமக்குள்ளன. அதை முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |