தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம் – செய்தி செய்தியின் பின்னூட்டத்தில் ஒரு சில முட்டாள்தனமான உளறல்களை கண்டேன் அதற்காக இந்த பதிவு.தோவலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
உளவாளிகள் எதிரிகளின் கூடாரத்திற்குள் புகுந்து துவம்சம் செய்வதை படத்தில் தான் பார்த்திருப்பீர்கள். அதனை நேரில் செயல்படுத்தி காட்டியவர் தோவல். வடகிழக்கு மாநிலங்களில் நடந்தேறிய நக்சல் பயங்கரவாதத்தை முறியடித்து அமைதி நிலைக்கு திருப்பியவர் தோவல் அவர்கள்.
காலிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்த ஆபரேசன் புளூ ஸ்டார் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள் அதன் ஹெட்டே தோவல் தான்.ஆபரேசன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு திடீரென்று 7 வருடம் ஆளை காணவில்லை .எங்கே போனார் என்ன ஆனார் என்று யாருக்கும்தெரியவில்லைஅவரின் அடுத்த குறி தாவூத்தாக இருந்திருக்கிறது .குரானை முழுமையாக கற்றுகொண்டு முஸ்லீமாக. மாறி பாகிஸ்தானில் 7 வருடம் Undercover operation ல் இருந்தார் (எலி படத்தில் வரும் வடிவேலு மாதிரி)தாவூத்தை நெருங்கும் போது இந்தியாவிலிருந்து அழைப்பு காங்கிரஸ் களவாணிகள் வேண்டாம்
இந்தியா திரும்புங்கள் என்று . இந்தியா வந்த இவர் ரிட்டயர்டு ஆகி வீட்டில் அமர்ந்தார். 2014 ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றது. மீண்டும் அஜித் தோவல் அழைக்கப்பட்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் .முதல் வேலையாக இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்று இலங்கைக்கு அனுப்பி வைத்தார் மோடி. இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டது மைத்திரிபால சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றார். ராஜபக்கே வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்தார். என்னுடைய தோல்விக்கு காரணம் இந்தியா தான். இந்தியா என்னை தோற்கடித்து விட்டது என்றார்.
அடுத்த டார்கெட் ஏமனில் மாட்டிய நர்ஸ்களை பத்திரமாக மீட்டது. அடுத்து எல்லை தாண்டி பர்மாவில் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்தது. சர்ஜிகள் ஸ்டிரைக்கின் சூத்திரதாரி தோவல் தான்.
அமர்நாத் துப்பாக்கி சூட்டிற்கு பதிலடி நந்து வருகிறது. 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.தற்போது சீனா செல்லவிருக்கிறார்.பாகிஸ்தானியர்களிடம் தோவலின் போட்டோவை காட்டி பாருங்கள் பயத்தில் உளற ஆரம்பித்துவிடுவார்கள். தற்போது ஜெர்மனியில் நடந்த மாநாட்டின் பிக்சரை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள் உண்மை விளங்கும். ராணுவத்திற்கு விகே சிங்கும், உளவாளியாக தோவலை பெற்றுள்ளோம். (விகே சிங் சமீபத்தில் மொசூல் நகரத்திற்கு சென்றிருந்தார் ஏன் என்று பாருங்கள்)
ஒருவரின் உருவத்தை வைத்து அவரின் திறமையை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். இன்னும் இவரை போன்ற முகம் தெரியாத பல சாதனையாளர்களை தன்னுள்ளே கொண்டுள்ளது பாரத தேசம் .
ரவீந்தர் கௌசிக்கிற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த மாமனிதன் அஜித் தோவல். இந்தியாவின் ஆகச்சிறந்த மனிதர்கள் பட்டியலில் முதலிடம் அஜித் தோவலுக்கே.
You must be logged in to post a comment.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
1unconcerned