மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சீனா செல்ல உள்ளார்.
எல்லையில் ரோந்து செல்வது தொடர்பான பிரச்னையில் இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல மாதங்கள் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்., மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருந்தார். கடந்த டிச., மாதம் பார்லிமென்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியிருந்தார்.
தொடர்ந்து சமீபத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இந்தியா வெளியுறவுத்துறை- சீனா துணை அமைச்சர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட இந்தியா சீனா இடையிலான உறவுகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது எனக்கூறியுள்ளது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |