சாட் கபார் 60 மனைவியர்களின் கல்லறைகள்

60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன் கர்நாடக மாநிலத்தில் 1659-ம் ஆண்டில் பிஜாப்பூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் நினைவுச் சின்னமாக சாத் கபார் எனும் இடம் அமைந்துள்ளது.

சத்ரபதி சிவாஜி எனும் மன்னரின் பெயரை கேட்டாலே அந்த காலத்து மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத் தான் வெற்றி என்று கூட பேசிக் கொள்வார்களாம்.

அதனால் இஸ்லாமிய அரசர்களில் சிலர் சத்ரபதி சிவாஜி மீது பொறாமை கொண்டுள்ளனர்.

ஆனால் அதிலும் அப்சல்கான் எனும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்க துணிந்து போருக்கு தயாரானான்.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான், போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோதிடர் சிவாஜியை எதிர்த்து போரிட்டால் நிச்சயம் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அப்சல்கான் தான் ஒருவேளை இந்த போரில் இறந்து விட்டால், தனது 60 மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதி கொண்டு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தான்.

அதனால் 60 மனைவிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, படைகளை சூழ செய்து, 60 பேரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொடூரமான முறையில் கொல்வதற்கு படையினருக்கு உத்தரவிட்டான்.

ஆனால் அந்த 60 பேரில் இரண்டு பேர் தப்பிச் செல்ல அவர்களை கண்டுபிடித்து கொன்றான். பின் தன் 60 மனைவிகளும் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.

அதன் பின் சிவாஜியுடன் கொண்ட போரில், ஜோதிடர் கூறியது போலவே அப்சல்கானின் படைகள் தோல்வியுற்றதால், சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான்.

பின் அப்சல்கான் மற்றும் கொடூரமாக கொலை செய்த அவனின் 60 மனைவியர்களின் கல்லறைகள் கொண்ட இடத்தை சாட் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது சுற்றுலாப் பிரதேசமாக திகழ்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...