நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை பல வீனப்படுத்த நினைக்கும் காங்கிரசின் சதிக்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “மகாராஷ்டிராவின் இந்த தேர்தல் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமல்ல. இந்தத் தேர்தலில் ஒருபுறம் சாம்பாஜி மகாராஜை நம்பும் தேசபக்தர்களும் மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்துபேசுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நகருக்கு (அவுரங்காபாத்) சத்ரபதிசாம்பாஜி நகர் என்ற பெயரை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை பால் தாக்கரேவால் எழுப்பப்பட்டது. மகாவிகாஸ் அகாதி அரசு 2.5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால், காங்கிரஸின் அழுத்தத்தால், இந்தபெயர் மாற்றம் நிகழவில்லை. மஹாயுதி அரசாங்கம் இந்த நகரத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என்று பெயரிட்டது. உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினோம், பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றினோம். அவுரங்காபாத், சத்ரபதி சாம்பாஜி நகராக மாற்றப்பட்டதில் யார் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்? ஆனால், இந்தமுடிவை ரத்து செய்யக்கோரி யாருடைய சீடர்கள் நீதிமன்றம் சென்றிருந்தார்கள்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலை நோக்கு பார்வையை மகாராஷ்டிரா வழிநடத்த வேண்டும். இந்தத் தீர்மானத்துடன் பாஜகவும், மகாயுதியும் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் மகாராஷ்டிராவில் நவீன உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்று சம்பாஜி நகர் வழியாக சம்ரித்தி நெடுஞ்சாலை செல்கிறது. அது மராத்வாடா, விதர்பா மற்றும் மும்பையுடன் நேரடியாக இணைக்கபட்டுள்ளது.

மகாராஷ்டிரா வளர்ச்சியின் இந்தமாபெரும் திட்டம் மட்டுமல்ல, விட்டல் பெருமானின் பக்தர்களின் வசதிக்காக, பால்கி நெடுஞ்சாலையையும் அமைத்துள்ளோம். பாஜகவும் மகாயுதியும் ஒரே உறுதியுடன் வேலை செய்கின்றன.

மகாராஷ்டிராவில் மஹாயுதி அரசு உருவானபிறகு அதிகபட்ச அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலீட்டால் மக்கள் பயன்அடைந்துள்ளனர். இந்த மண்டலத்தில் மட்டும் ரூ.70,000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா மக்கள் பலபத்தாண்டுகளாக மராத்திக்கு உயரடுக்கு மொழி அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மராட்டியப் பெருமை தொடர்பான இந்தப்பணியையும் பாஜக நிறைவேற்றி உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ்கட்சி ஆட்சி அமைப்பதற்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அல்லாமல், பிரிவினையையே நம்பியுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னோக்கி செல்வதை காங்கிரஸ் தடுக்கிறது. அதனால் தான் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. இது தொடர்பான பழைய செய்தித்தாள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன. இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸின் உண்மையான சிந்தனை என்ன என்பது அந்த விளம்பரங்களில் தெளிவாகத் தெரிகிறது.

இடஒதுக்கீடு என்பது நாட்டிற்கு எதிரானது என்றும் தகுதிக்கு எதிரானது என்றும் காங்கிரஸ்கூறியது. காங்கிரஸின் மனநிலையும், காங்கிரஸின் நிகழ்ச்சிநிரலும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஓபிசி சமூகத்தைச்சேர்ந்த ஒருபிரதமரை அவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளுக்குச் சென்று இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். இதற்காக, தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சிறுசிறு சாதிகளாகப்பிரிக்க சதி செய்கின்றனர். ஓபிசியை சாதி ரீதியாக பிரித்து விட்டால் அதன் பலம் குறையும் என்றும், அது நிகழ்ந்தால் தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அது கருதுகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்புகிடைத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை நிறுத்திவிடும். எனவே, இதற்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், ஒற்றுமையின் வலிமையை அதிகரிக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க ...

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக்கொள்ளாது – வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் ''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து எடை போட்டது காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி ''காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை அதன் ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் க ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 'ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அ ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அஞ்சாது – அண்ணாமலை பேச்சு 'தி.மு.க., அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்கு தொடருவோம் ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த ம ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...