”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா-
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”
இது பாரதியின் வரிகள்!
தமிழகத்தில் பாவிகள் இருக்கக் கூடாது-
காவிகள் இருக்கலாம்! – என்பது தமிழக பாஜக தலைவர் Dr. தமிழிசை சவுந்தராஜன் அவர்களின் முழக்கம்!
1925 ல் காவிக்கொடியோடு தேசப்பக்தி இயக்கமாக RSS இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது! பாஜக மற்றும் பல்வேறு இயக்கங்களாக இப்போது RSS அறியப்படுகிறது! தேசப்பக்தியும், தேசத்திற்கு இடையூறாக இருப்பதை எதிர்ப்பது என்னும் முயற்சியும்தான் காவிநிறத்தில் நாம் கான்பதாகும்!
தேசப்பக்தி வேண்டும் ஆனால் பாவிகள் கூடாது என்பதுதான் தலைவரின் வாதம்!
பாவிகள் யார் என்பது இப்போது கேள்வியாகிறது!
யார் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்களோ, இப்போதும் துரோகம் செய்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாவிகள்!
(1) தமிழக மக்கள் இந்தியை படிக்கமுடியாமல் செய்தது மிகப்பிரிய பாவச்செயல்! இந்தி பயிலாமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது என்று நம்பிய காரணத்தால் அவர்கள் படிக்கமுடியாமல் செய்யவில்லை! அப்படி இருந்திருந்தால் அந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களின் வீட்டு பிள்ளைகளும் இந்தி படிக்காமல் இருந்திருப்பார்களே! அப்படி நடக்கவில்லை! தலைவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் இந்தி பயின்றார்கள். தொண்டர்களின் வீட்டுப்பிள்ளைகளுக்குத்தான் பாவத்தை விதைத்தது திமுக!
(2) 1972 ல் மது விலக்கை ரத்து செய்தது மிகப்பெரிய பாவம்!
அரசாங்கமே மது வியாபாரம் செய்து குடிமக்களை கொடுமையான முறையில் கசக்கிப் பிழிந்து சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச்செயலாகும்!
இந்தியாவில் பல மாநிலங்களில் மது தடை செய்யப்படாமல் இருக்கிறது, ஆனால் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துவதும் மதுப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் இங்குதான்!
(3) மாநில அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயனை பணம் தராமல் யாரும் அனுபவிக்க முடியாது என்னும் அளவில், தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக ஊழலில் ஈடுபடுவது என்பது மிகப்பெரிய பாவமாகும்!
(4) ’நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவம்! நீர்நிலைகளை பராமரிக்கவேண்டிய இடத்தில் இருக்கும் அரசு, நேர் மாறாக செயல்பட்டு நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்களை கட்டியதும், தங்களின் கட்சிக்காரர்களை வைத்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டதும், ஆக்கிரமித்துக்கொண்ட சமூகவிரோதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டதும் மிகப்பெரிய பாவச்செயலாகும்!
(5) ஜனநாயக நாட்டில் குடும்ப அரசியல் செய்வது மிகப் பெரிய பாவமாகும்!
இந்த பஞ்சமா பாவங்களை செய்தோரையும் செய்வோரையும் கருத்தில் கொண்டு Dr.தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் “தமிழகத்தில் பாவிகள்தான் இருக்கக்கூடாது! காவிகள் இருக்கலாம்!’ என விமர்சனம் செய்திருப்பது பாராட்டத்தக்கது!
குமரிகிருஷ்ணன்
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.