ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களிடம் அனுகூலம் பெறுவதையும் தவிர்க்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர், நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தபின், சிறிதுநேரம் இருக்கும்படி, அமைச்சர்களிடம் கூறிய பிரதமர் மோடி, அவர்களுக்கான உத்தரவை படித்துகாண்பித்தார்.
அப்போது, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதையும், பொதுத் துறை நிறுவனங்களிடம் அனுகூலங்கள் பெறுவதையும் தவிர்க்கும்படி, அமைச்சர்களுக்கு, மோடி உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய அமைச்சர்கள், அரசு பயணமாக எங்கு சென்றாலும், அரசு இல்லங்களில் தங்காமல், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாக்கி உள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்துள்ள மோடி, அரசு இல்லங்களில் மட்டுமே தங்கவேண்டும் என, அமைச்சர்களிடம் கண்டிப்பாக கூறியுள்ளார்.
அமைச்சர்கள், தாங்கள் வகிக்கும் இலாகாக்களுக்கு சொந்தமான வாகனங்களில் செல்வதும், பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு அனுகூலங்களை பெறுவதும், மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற, அதிகார முறைகேடுகளை பொறுக்கமுடியாது என, அமைச்சர்களிடம், பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதையடுத்து, அமைச்சர்கள், தங்கள் இலாகாவை சேர்ந்த அதிகாரிகளிடம், இனி பொதுத் துறை வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என, உத்தரவிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.
அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, 2 ஆண்டுகளே உள்ள நிலையில்,ஊழலற்ற அரசு என்றபெயரை காப்பாற்றுவதில், பிரதமர்மோடி உறுதியாக இருப்பதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.