5.8 டன் எடையுள்ள இலகு ரக ராணுவ ஹெலி காப்டர்களை , இந்துஸ்தான் ஏரோ நாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்புதலை, பாதுகாப்புகொள்முதல் கவுன்சில் அளித்துள்ள நிலையில், பெங்களுருவில் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தியை நேற்று, அருண்ஜெட்லி தொடங்கிவைத்தார்.
மேலும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி போர் விமானமான HAWK-i-ஐயும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அருண்ஜெட்லி, தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதேகூடாது என குறிப்பிட்டார்.
டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான பிரச்னையை மறை முகமாக சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, எதிரிகளிடம் இருந்து இந்தியாவைகாக்க, நாட்டின் அனைத்து வளங்களையும், நமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ராணுவ தளவாடங்களுக்காக பிறநாடுகளை சார்ந்திராமல், நம்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.