பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப் படத்தைக் காட்டி அனுதாபம்தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம்தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப் படத்தையும் அவர் காட்டினார். அந்தப் புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப் பட்டது என்றும் காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம் என்றும் அவர் கூறினார்.

அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப் பட்டது. ஆனால் உண்மையில் அந்தப் பெண காஷ்மீரைச்சேர்ந்தவர் அல்ல என்பதை இந்தியா தெளிவு படுத்தியது.

அந்தப்பெண் 17 வயதான பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச்சேர்ந்த ரவியா அபு ஜோமா ஆவார்.மேலும் அந்தப்படம் கடந்த 2014-ம் ஆண்டில் காஸா நகர் மீது இஸ்ரேல் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடக மாடியது. ஆனால் அவரின் நாடகம் சிலமணி நேரங்களில் அம்பலமானதால் ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது
 

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் அட்டூழியத்தை வெளிச்ச மாக்கும் வகையில் இந்திய தக்கபதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் உமர் ஃபயாஸ் என்ற ராணுவவீரர் திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்தியபிரதிநிதி பலோமி திரிபாதி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் காசா புகைப் படத்தைக் காட்டி பாகிஸ்தான் அனுதாபம்தேட முயற்சிப்பதாகவும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐநா அவையில் கிழித்தார். இது தொடர்பாக ஐநா.,வுக்கான இந்திய தூதர் அக்பரூதின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.

அதாவது போலியான புகைப் படத்தைக் காட்டி பாகிஸ்தான் தவறான கதைகளை கட்டியது. ஆனால் இந்தியா உண்மையான புகைப் படங்களை பயன்படுத்து பாகிஸ்தான் தீவிர வாதாத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...