கள்ளப்பண நடிகர்கள்!

சினிமா வசனத்தில் பொய் சொல்லக்கூடாது என்றுதான் பாஜக சொல்கிறது! விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை! சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய்! அப்படி ஒரு பொய்யை சொல்லி இந்தியாவில் மருத்துவத்திற்கு 12 சதவிகிதம் புதிதாக வரி என ஒரு பொய்யை சொல்லி இந்தியாவில் இலவச மருத்துவம் அரசு மருத்துவமனைகள் செய்யப்படுவதை மறைத்திருப்பது இந்தியாவை இழிவுப்படுத்தி மக்களை திசை திருப்புவது என்பதுதான் பாஜக வின் கருத்து!

 

     இந்தியாவை இழிவுப்படுத்தும் வகையில் பொய்களை சினிமாவில் சொல்லாதீர், மதுவுக்கு 58 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை வரி இருக்கும்போது “தமிழகத்தில் மதுவுக்கு வரி இல்லை” என்பதுபோல் எதற்கு பொய் சொல்கிறீர்கள்? என்பதுதான் பாஜக வின்  தமிழக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தராஜன், மத்திய அமைச்சர் அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர், இல.கணேசன், தேசிய செயலாளர், H.ராஜா ஆகியோரின் கண்டனக்குரல் ஆகும்!

 

     கண்டனக்குரல் எழுப்பி நாடு முழுமையும் மேற்படி சினிமாவில் சொல்லப்பட்டிருப்பது பொய் என மக்களுக்கு புரிய வைத்திருப்பது பாஜக வின் சாதனையாகும்!

 

     டெல்லியிலிருந்து பேசும் ராகுல் வின்ஸி முதல் இங்கிருந்து பேசும் சினிமா நடிகர்கள் மற்றும் தேசத்திற்கு எதிரான அரசியல் கட்சியினர் வரை, ”அந்த படத்தில் சொல்லியிருப்பது உண்மைதான்”, என்று வாதிடவில்லை! சென்சார் செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்கவேண்டியதில்லை என்றுதான் சொல்கிறார்களேயன்றி, ”சாராயத்திற்கு எங்கே வரி இருக்கிறது?” என்றோ, ”சிங்கப்பூரில் இலவச மருத்துவம்தான்”, என்றோ, ”இந்தியாவில் இலவச மருத்துவமனை எங்கே இருக்கிறது?”, என்றோ, யாரும் கேள்வி எழுப்பவில்லை! எனவே இந்த பிரச்சினையில் பாஜக வெற்றியடைந்திருக்கிறது! தலைவர்கள் ஒத்த குரலில் குரல் கொடுத்திருக்கிறார்கள்!

 

 

     ”சதுரமான உலகத்தில் உயரமான மனிதன் நான்!”, என்று வசனம் பேசினால்கூட சினிமா தியேட்டரில் கை தட்டுவார்கள்! “நீயெல்லாம் ஒரு பொண்ணை பெற்ற அப்பனா? அவ மனசில யாரு இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு, உன் மகளை, அவனோடு அனுப்பி வைக்கிறத உட்டுப்புட்டு, ’பெற்றேன்’ ’வளர்த்தேன்’ ’படிக்கவைச்சேன்’ என்றெல்லாம் வசனம் பேசுறியே வசனம். புத்திமதிய பொன்ணுக்கு சொல்றத விட்டுட்டு, உன் புத்திக்கு சொல்லு!”, அப்படீனு ஒரு வசனம் பேசினா உடனே கை தட்டுவார்கள். ஆனால் அவங்க வீட்டுல அப்படி ஒரு பிரச்சினை வந்தா கைதட்டமாட்டார்கள். கையை வெட்டுவேன் என்பார்கள்!

 

     சினிமா தியாட்டரில் கைதட்டிவிட்டார்கள் அதனால் அந்ததிரைப்படத்தில் சொன்னதைப்போல சாராயத்திற்கு வரி இல்லைதான் என்றா நம்பிவிட்டார்கள். சாராயத்திற்கு 58 சதவிகிதத்தில் துவங்கி 200 சதவிகிதம் வரை வரி இருக்கிறது! ஆண்டுக்கு1000 கோடி அரசுக்கு சாராயத்தில் லாபம் கிடைப்பது வேறு எப்படி?

 

          மது அருந்திவிட்டு தவறான பெண்களோடு ஊர் சுற்றுவதற்காக பலர் சிங்கபூருக்கு போவார்கள்! அவர்களுக்கு அது சொர்க்கபூமியாக இருக்கலாம்! அது ஒரு நாடேயல்ல! சிங்கப்பூர் ஒரு நகர் அளவுக்குத்தான் இருக்கும்! தமிழ் நாட்டின் ஜனத்தொகை 8 கோடி என்றால் சிங்கபூரில் 56 லட்சம் மட்டும்தான்! பதினாறில் ஒரு பங்கு! சிங்கப்பூரில் இலவச மருத்துவம் இல்லை! மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கு காப்பீட்டுத்தொகை அடிப்படையில் அங்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது! மருத்துவ காப்பீடு இந்தியாவிலும் இருக்கிறதே! பொய்களின் அடிப்படையில், சிங்கப்பூரை உயர்த்தி இந்தியாவை தாழ்த்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது!         

 

 

     இந்த நேரத்தில் ஜி.எஸ்.டி யைப் பற்றி சிறு விளக்கம் தரவேண்டியது அவசியமாகிறது! ஜி.எஸ்.டி என்பது வரி குரைப்புதான், வரிவிதிப்பல்ல! ஜி.எஸ்.டி என்பது பாஜக அரசு கொண்டுவந்த புதிய வரியல்ல! பழைய காங்கிரஸ் அரசில் முப்பதுக்கும் மேற்பட்ட வரிக்கொடுமைகள் இருந்தது! அதை ஒன்றே ஒன்றாக தொகை குறைவாக குறைத்ததுதான் ஜி.எஸ்.டி!

 

     ஜி.எஸ்.டி என வரியின் பெயர் மாற்றப்பட்டப்பிறகு பாதி பொருட்களுக்கு வரி கிடையாது! 5 சதவிகிதம் 12 சதவிகிதம் 18 சதவிகிதம் 28 சதவிகிதம் என எல்லா பொருட்களுக்குமே வரி குறைக்கப்பட்டதுதான் ஜி.எஸ்.டி!

 

      சாராயத்திற்கும் பெட்ரோலுக்கும் வரி குறைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை! சாராயத்திற்கு வரியே இல்லை என்பதுபோல் அந்த சினிமாவில் பொய் சொல்லப்பட்டுள்ளது! பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு! – என்று விட்டுவிடலாம்! ஆனால் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றி பெரும்பணக்காரர்களையும் வரி ஏய்ப்பு செய்வோரையும் கடத்தல் வியாபாரிகளையும் காப்பாற்றி, அவர்களிடம் வாங்கிப்பிழைக்கவேண்டும் என்று துடியாத்துடிக்கும் எதிர்கட்சிக்காரர்கள் இப்போது சினிமாக்காரர்களையும் கையில் போட்டு பொய் பிரச்சாரம் செய்வதாலேயே உண்மையை விளக்கிட நாம் எதிற்கிறோம்!

 

    ஏற்கெனவே கலால் வரி, நுழைவு வரி,தயாரிப்புவரி, விற்பனைவரி, சில்லறை விற்பனை வரி, மதிப்புக்கூட்டுவரி, கூடுதல் மதிப்புக்கூட்டுவரி இப்படி எல்லாம் எண்ணற்ற வகையில் இருந்த வரிகளை நீக்கிவிட்டு வரி வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை எடுத்துவிட்டு, சுங்க அதிகாரிகளின் லஞ்சத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டு, பல பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எல்லாபொருட்களுக்கும் வரியை குறைத்து அறிவித்திருப்பதுதான் ஜி.எஸ்.டி! அனைத்து மாநில நிதிஅமைச்சர்களும் உறுப்பினர்களாக பங்குபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடி மேலும் குறைக்கவேண்டிய வரிகளை குறைக்கும்!

 

     இதனால் வியாபாரிகளுக்கு வேலை குறைவு! நுகர்வோருக்கு விலை குறைவு! டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் வரி செலுத்துவதும் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதும் கண்காணிக்கப்படும் என்பதால் வரி ஏய்ப்பு செய்வோருக்குத்தான் கஷ்டம்!

 

     ஒரு பொருள் என்றால் இந்தியா முழுமையும் ஒரே வரிதான்! மாநில எல்லைகளில் சரக்கு லாரிகளை தடுத்து நிறுத்தி சுங்கச்சாவடிகளில் வரி வசூலும் லஞ்ச வசூலும் செய்யும் அனியாயத்தை தடுத்திருப்பதுதான் ஜி.எஸ்.டி! எல்லா மாநில முதல்வர்களின் ஒப்புதலையும் பெற்றுதான் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! இதில் காங்கிரஸ் முதல்வர்களும் கம்யூனிஸ்ட் முதல்வரும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டுள்ளனர்!

 

     வெட்கமில்லாமல் சூடு சொரணை இல்லாமல் தங்கள் கட்சியே ஒத்துக்கிட்ட வரி குறைப்பை, இப்போது அவர்களே எதிர்ப்பதாக அறிக்கை விடுகிறார்கள், சினிமாக்காரர்களும் உடன் சேர்ந்துக்கொள்கிறார்கள், சுங்கச்சாவடியில் லஞ்சம் வாங்க முடியலியே என்னும் ஆத்திரத்திலும், ஜி.எஸ்.டி டிஜிட்டல் முறையால் கள்ளக்கணக்கு காட்டமுடியலியே என்னும் ஆத்திரத்திலும் சினிமாவில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்!

 

     ஜி.எஸ்.டி யில் இன்னும் ஒரு முக்கியமான விசயம் இருக்கு! வருடத்திற்கு 30 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வியாபாரி வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை! வாங்குவோர் பில்லில் வரி போடக்கூடாது! அவர் எந்த பொருளை வாங்கி விற்றாலும் வரி இல்லை! வருடம் 30 லட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை எந்த வியாபாரம் செய்தாலும் ஒரு சதவிகிதம்தான் வரி! அதற்கு மேலும் அரிசி, பருப்பு, எண்ணை போன்ற உணவுப்பொருட்களுக்கு வரியே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இவைகளுக்கு 5 சதவிகித வரி இருந்தது! வரி என்பது பொருளின் விலைக்கு அல்ல! அந்த பொருளின்மீது அந்த வியாபாரி வைக்கும் லாபத்திற்குத்தான் வரி! வரியை வியாபாரிதான் செலுத்தவேண்டும்! வாங்குவோர் செலுத்த தேவையில்லை!

 

       முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பொருளுக்கு பலமுறை வரி விதிக்கப்படும்! அதை நாம் வாங்கும்போது ஐந்தாறு வரியை சேர்த்து செலுத்துவோம்! இப்போது ஒரே வரிதான்!

 

     ஜி.எஸ்.டி வந்ததும் பொருட்களின் விலை குறைந்தது! ஜி.எஸ்.டி என ஒரே வரியாக குறைக்கப்பட்டதால் வியாபாரிக்கும் நல்லது வாங்குவோருக்கும் நல்லது!

 

     ஆனால் ஜி.எஸ்.டி யால் ஒரு சிக்கல் இருக்கிறது! அது என்னவென்றால், யாரும் வரிகட்டாமல் வியாபாரம் செய்யமுடியாது! முன்பெல்லாம் வரியென்று வாங்குவார்கள் அதை அரசுக்கு கட்டமாட்டார்கள்! பில்போடாமலும் வியாபாரம் செய்வார்கள்! இப்போது மோடி அரசாங்கத்தில் ஜி.எஸ்.டி பில் கம்பியூட்டரில் போடவேண்டும்!

 

     பொருள் தயாரிக்கும் இடத்தில் கம்பியூட்டர் பில் போடப்பட்டால் அந்த பொருள் எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் அவர்கள் கூட்டிவைக்கும் விலைக்கு வரி செலுத்துகிறார்களா? என்று அதிகாரிகள் கண்காணிப்பார்கள்! எனவே கள்ள வியாபாரம் செய்ய முடியாது! கடத்தல் பொருட்களை வைத்து கள்ளவியாபாரம் செய்வோருக்கு, ஜி.எஸ்.டியால் சிக்கல்! இந்த கள்ள வியாபாரிகள்தான் சினிமாக்காரர்களோடு சேர்ந்து ஜி.எஸ்.டி யை எதிர்க்கிறார்கள்! கள்ளவியாபாரிகளுக்கும் கடத்தல் காரர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

 

 

     கலப்படம் என்பது மிகப்பெரிய சமூக விரோத செயல்! பாலில் தன்னீரை கலப்பது, சக்கரையில் மனித எலும்புத்தூள் மற்றும் பிளீச்சிங்பவுடரை கலப்பது, தேனில் வெல்ல கரைசலை கலப்பது, அரிசியில் கற்களை கலப்பது, தங்கத்தில் செம்பு போன்ற உலோகங்களை கலப்பது இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்து பொருட்களிலும் கலப்படம் இருக்கிறது! அரசியலிலும் கலப்படம் இருக்கிறது அரசியலில் சினிமாவை கலக்கிறார்கள்! இந்த கலப்படம் வேண்டாம் என்று மறுத்த ஒரே தலைவர் காமராஜர்தான்! எம்.ஜி.ஆர் தன்னிடம் வந்தபோது அவர் வேண்டாம் என்று மறுத்தார்! அரசியலில் முதல்முதலில் சினிமாவை கலப்படம் செய்தது திமுகதான்!

 

     பேராசை பெரு நஷ்டம் என்பதைப்போல தனது குடும்பத்தில் உள்ளவர்களையே சினிமாவில் புகுத்தி அந்த சினிமாவை அரசியலில் கலப்படம் செய்யலாம் என்று புறப்பட்ட கருனாநிதி மு.க முத்துவை அரசியலில் புகுத்தியபோது கோபமடைந்த எம்.ஜி.ஆர் காமராஜரிடம் போனார்! காங்கிரஸ் கட்சிக்கு சினிமா கலப்படம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் காமராஜர்!

 

     சினிமாக்காரரான எம்.ஜி.ஆர் அவர்களை திமுக கருவேப்பிலையாகத்தான் பயன்படுத்தியது! ஆனால் சினிமாவில்வரும் மாயாஜால பொய்யான காட்சிகளையெல்லாம் உண்மையென நம்பிவிட்ட அந்தகால மக்கள், எங்களுக்கு குழம்பு கூட்டு எல்லாமே இந்த கருவேப்பிலைத்தான் என்று சொல்லிவிட்டனர்! சினிமா டிக்கட்டுக்கு கொடுக்கும் மரியாதையை ஓட்டுச்சீட்டுக்கு கொடுத்து நடிகரை அரசியலிலும் நடிக்கச்செய்துவிட்டார்கள்!

 

     இந்த சம்பவம் நடந்ததிலிருந்து, சூரைக்காற்றில் கோபுர உச்சிக்கு போய்விட்ட காய்ந்த சருகு ”நான்தான் கடவுளைக்காட்டிலும் உயர்ந்தவன்”, என சொன்னார்ப்போல சினிமா நடிகர்கள் எல்லோரும் ”நான்தான் முதல்வர்” என்கிறார்கள். ஆனால் அந்த கால மக்களிடம் இருந்த சினிமா அறியாமை இந்தகால மக்களிடம் இல்லை! எனவே அப்போது வெந்த சினிமா பருப்பு இப்போதைய அரசியலில் வேகாது!

 

     கள்ளக்கடத்தல், ரியல் எஸ்டேட், சினிமா இந்த மூன்றில் ஈடுபடுவோர்தான் இன்றைய பொருளாதார குற்றவாளிகள்! கள்ளப்பணம் கருப்புப்பணமெல்லாம் பெரும்பங்கு இவர்களிடம்தான் இருக்கிறது! சினிமாவைப் பொறுத்தமட்டில் இதில் பெரும்பங்கு நடிகர்களையே சாரும்!

 

     ”ஒரு படத்திற்கு முப்பது கோடி ரூபாய் செலவாகியிள்ளது என்று சொல்கிறார்கள்! எப்படி? என்று கேட்டால், கதாநாயகனாக நடிக்கும் நடிகனுக்கும் கதாநாயகி நடிகைக்கும் சேர்த்து 25 கோடி! இதர தயாரிப்பு செலவு 5 கோடி! என்கிறார்கள்! படத்திற்கு செலவு 5 கோடிதான்! 5 கோடி செலவு என்றால் 7 கோடி வசூலித்தால் போதும்! 7 கோடியை வசூலிக்க வேண்டிய இடத்தில், 32 கோடியை ஏதாவது பொய்களை சொல்லி அதிக கட்டணம் வசூல் செய்து மக்களிடமிருந்து கறந்து விடுகிறார்கள்!

 

     ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் இயக்குனர் இதர வல்லுனர்கள் எல்லோரும்தான் காரணம்! இயக்குணர்களும் நிபுணர்களும் சொல்லிக்கொடுத்து, அவர்கள் சொல்லியபடி நடிக்கும் நடிகன், இப்படி பணத்தை வாரிக்கொண்டுபோனால் சினிமாத்துறை எப்படி உருப்படும்?”- இது சினிமா இயக்குனர் பாரதி ராஜாவின் கேள்வி!

 

     நான் வரி கட்டுகிறேன் என்று கமலகாசன் அவ்வப்போது சொல்கிறார்! எத்தனைக்கோடிக்கு வரிகட்டுகிறார்? என்பதுதான் முக்கியமான கேள்வி! ஒவ்வொரு நடிகனும் ஒரு ஆண்டுக்கு 100 கோடி கணக்கு காட்டி 80 கோடி வரியாக செலுத்தவேண்டும்! அப்படி செய்கிறார்களா? அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ந்தபிறகு 80 சதமானம் வரி செலுத்தவேண்டும் என்பது சட்டம்!

 

     சினிமா தயாரிப்பாளர்கள், கேமராமேனுக்கு 50000 கொடுத்தால் சேவை வரி என சொல்லி ரூபாய் 2500 ஐ பிடித்துக்கொள்வார்! அப்படி பிடிக்கப்பட்டதை அவர் ஒரு வாரத்தில் அரசாங்கத்திற்கு கட்டிவிடவேண்டும் என்பது சட்டம்! தயாரிப்பாளரான விஷால் இந்தவகையில் 50 லட்சம் ரூபாயை ஒரு வருட காலமாக அரசுக்கு கட்டாமல் கையாடல் செய்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி!   

 

     சினிமாதுறைக்கு வரும் பணமே கள்ளப்பணமும் கருப்புப்பணமும்தான்! கள்ளத்தனமாக வாங்கி கள்ளத்தனமாக பதுக்குகிறார்கள்! 10 கோடி வாங்கினால் 5 லட்சம் வாங்கியதாக சொல்வார்கள்! மீதியை கள்ள மார்க்கெட்டில் விடுவார்கள்! பினாமி பெயரில் கல்யாண மண்டபங்களை கட்டுவார்கள், சாப்பிங் மால்களை கட்டுவார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்குவார்கள்!

 

     ஆயிரம் ரூபாய் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏழைகளுக்கு நாய்க்கு எலும்புத் துண்டுபோல் வீசிவிட்டு அதை பத்திரிக்கையில் போட்டு கொடை வள்ளல் என்று பெயர் எடுப்பார்கள்! சினிமா பைத்தியங்களை வைத்து ரசிகர் மன்றங்களை அமைத்து, அதை காவல் நாய்களைப்போல பயன்படுத்துவார்கள்!

 

     பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் சமீபத்தில் கள்ளப்பணத்தையும் கறுப்புப்பணத்தையும் ஒழிக்கும் வகையில் மண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் இந்த நடிகர்களின் பணம் பல ஆயிரம் கோடி இழப்பாகிவிட்ட ஆத்திரத்தில்தான் மத்திய அரசுக்கு எதிராக சினிமாவில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்!                                        

 

                                 — குமரிகிருஷ்ணன்    

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...