‘பிரதமர் மோடி தான் தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி அளித்தா[ர்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டு உள்ளது.
இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
அவர் தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக, பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா திட்டத்தை திறந்து வைத்துள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குமிட வளாகம் கட்டும் திட்டம், 2020 ஜூலையில் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னையில் தங்குமிட திட்டமானது, 2021 செப்டம்பரில், பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று.
ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், 707 கோடி ரூபாய் செலவில், 18,720 படுக்கைகள் உடைய தங்குமிட திட்டத்திற்கு, மத்திய அரசின் மானியம், 37.44 கோடி ரூபாய்.
பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 498 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் அறிந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |