” மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., குறித்து எதிர்க்கட்சிகள் இரவும் பகலும் பொய்யை பரப்புகின்றன. இது அவர்களின் வழக்கம். ஆனால், மக்கள் பா.ஜ.,வுக்கு ஆசி வழங்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் இங்கு தேர்தல் நடந்த போது, இம்மாநிலத்தில் பெரிய அரசியல் நிபுணர்கள் பா.ஜ.,வை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மக்களின் எழுச்சியை என்னால் பார்க்க முடிகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தேசத்திற்கு புதிய நம்பிக்கையை தருகிறது.
அதிகாரம் தங்களது பிறப்புரிமை எனக்கருதியவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளனர். தங்களுக்கு ஆசி வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதற்காக மக்கள் மீது அதிக கோபத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்கின்றனர். நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
75 ஆண்டுகளாக பொய் மற்றும் வதந்திக்கான கடையை அவர்கள் திறந்து வைத்தனர். தற்போது, அவர்கள் இதனை இயக்கமாக மாற்றி வேகப்படுத்தி உள்ளனர். அவர்களின் செயல்பாடு, நாட்டை நேசிக்கும் மக்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொய்யையும் அவிழ்க்க வேண்டி உள்ளது. இந்த அதிகார பசியில் உள்ளவர்கள் மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பொய்யை கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |