பொதுப் போக்கு வரத்தை பயன் படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள் என்று நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி மெட்ரோவின் மெஜந்தா ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி நொய்டாவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டில் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை குறைக்கவிரும்புகிறேன். எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு பலவகை பொதுப் போக்கு வரத்து வசதி உதவியாக இருக்கும். சாமானியமக்கள் பணத்தை சேமிக்கவும், சுற்றுச் சூழலுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
2002-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் டெல்லி மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைத்தார். அது வரலாற்று சிறப்புமிகுந்த தருணமாகும். அப்போது முதல் டெல்லி மெட்ரோ ரயில்சேவை குறிப்பிடத்தகுந்த வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் மனோ பாவத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். தனிவாகன பயன்பாட்டுக்கு பதிலாக பொது போக்குவரத்தை பயன் படுத்த வேண்டும். இதன் மூலம் எரிபொருள் செலவை சேமிக்கவேண்டும். மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை கவுரவமாக கருதவேண்டும்.
நாட்டின் அனைத்து துறைவளர்ச்சிக்கு சிறந்த நிர்வாகம் அவசியமாகும். பொது திட்டங்களை பொறுத்தவரை இதனால் நமக்கு என்ன பயன்? இது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற மனோ பாவம் கூடாது. எங்களை பொறுத்த வரை தேசிய நலன் கருதியே முடிவுகள் எடுக்கப் படுகின்றன. அரசியல் ஆதாயம் கருதி அல்ல. இந்தியா வளமானநாடு. சிறந்த நிர்வாகம் இல்லாததால் அதன் பலனை நம்மால் அனுபவிக்க முடியவில்லை. இதனை மாற்ற நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். பலருக்கு இது கடினமானமுடிவாக உள்ளது. நாங்கள் வந்தவுடன், அதிகாரிகள் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வருவதாக நாளேடுகளில் செய்திவெளியாகின. அரசு ஊழியர்கள் மக்களுக்கு பதில்சொல்ல மிகவும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
டெல்லி மெட்ரோவின் மெஜந்தா ரயில்சேவை 12.6 கி.மீ. தொலைவு கொண்டது. தெற்கு டெல்லியின் கல்காஜி நிலையத்தில் இருந்து நொய்டா தாவரவியல் பூங்காவரை இயக்கப் படுகிறது.
தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு ஒக்லா பறவைகள் சரணாலயம்வரை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.