சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படங்களை மாற்றிய பிரதமர்

75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது  சமூக சமூக வலைதள பக்கங்களில் முகப்பு பக்கம் படங்களை மாற்றிய பிரதமர்வலைதள பக்கங்களின் முகப்புப் படங்களை மாற்றியுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவை சிறப்பாகக்கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன.

அதன் ஒருபகுதியாக, சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் நாட்டுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சமூக வலைதள பக்கங்களில் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி தனது முகநூல், ட்விட்டர் பக்கங்களின் முகப்புப் புகைப்படத்தை மாற்றி தேசியக் கொடியை வைத்துள்ளார். 75 ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி அனைவரும் தங்கள் சமூகவலைதள பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக்கொடியை வைக்கவேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.

பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மாற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தேசபக்தி ஊட்ட வேண்டிய நேரம் இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்� ...

இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் த� ...

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் – பிரதமர் மோடி பாராட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய � ...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இந்தியா அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச� ...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போருக்கு செல்வேன் – நயினார் நாகேந்திரன் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கே ...

‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!! பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்' ...

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர் ...

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர்  கைது இந்திய மண்ணில் இருந்துகொண்டு பாக்.,கிற்கு ஆதரவுதெரிவித்த தேசவிரோதிகள் 43 ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...