உலகை வழி நடத்துவது இந்தியாவின் கடமை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம் உஜ்ஜைனில் நேற்று நடந்தவிழாவில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதற்கும் பொது வானது இந்தியகலாச்சாரம். வாழும்கலையை உலகிற்கு இந்தியா கற்பித்துவருகிறது.
உலக ஒற்றுமையின் அடையாளமாக சிவ பெருமான் திகழ்கிறார். எனவே உலகை வழிநடத்த வேண்டியது நமதுகடமை. சிவ பெருமான் தீயசக்திகள் அனைத்தையும் அழித்தவர். அவரின் முதல்பெயர் ருத்ரா. அதன் அர்த்தம் சக்தி என்பதாகும்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் சிவ பெருமானின் குணாதி சயங்களைக் கொண்டிருக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த போரை நடத்தவேண்டிய அவசியமில்லை. சுய நலத்தை தியாகம்செய்தாலே அமைதியை நிலைநிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.