கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

 1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல்
2. கண்நோய்
3. மாலைக்கண் நோய்
4. கண்ணில் சதை வளருதல்
5. கண்ணின் இமையில் கட்டி வருதல்
6. கண்ணின் கருவிழியில் வெள்ளைப்பூ விழுதல்
7. கண் எரிச்சல்

8. கண்ணில் நீர் வடிதல்
9. கண்களில் வலி உணர்தல்
10. கண்ணின் வெண்படலம் சிகப்பாக இருத்தல்
11. கண்ணில் புரை விழுதல்
12. கண்களில் ஏற்படும் வீக்கம்
13. கண்கள் அடிக்கடி துடிப்பது
14. கண்களின் கீழ் கருவளையம்

கண் பார்வைத்திறன் அதிகரிக்க:
நாட்டு மருந்துக் கடையில் திரிபலா சூரணம் 1௦௦ கிராம் வாங்கி தினம் ஒருவேளை காலையில் சாப்பிடும்முன் ஒரு ஸ்பூன் தேனில் 5 சிட்டிகை சூரணத்தை குழப்பி 9௦ நாட்கள் சாப்பிட பார்வைத் திறன் அதிகரிக்கும்.

மூக்கிரட்டை, பொன்னாங்கன்னி, கீழாநெல்லி ஒவ்வொன்றிலும் கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி முறைப்படி சூரணம் தயாரித்து சூரணத்தை சம அளவில் கலந்து ஒரு பாட்டிலில் இருப்பு வைத்துக்கொண்டு தினசரி காலை ஒரு ஸ்பூன் தூளை ஒரு ஸ்பூன் தேனில் குழப்பி 9௦ நாட்கள் சாப்பிட நல்ல குணம் தெரியும்.

நாட்டு மருத்ந்து கடையில் 2௦௦ கிராம் தான்றிக்காய் வாங்கி வெய்யிலில் உலர்த்தி கொட்டைகளை நீக்கி தோலை மட்டும் இடித்து தூளாக்கி சூரணம் தயாரித்து தினமும், காலை, மாலை வேளைக்கு ஒரு ஸ்பூன் சூரணத்தை எடுத்து பாலில் கலந்தோ அல்லது தேனில் குழப்பியோ 6௦ நாட்கள் சாப்பிட்டு வர பார்வைத் திறன் அதிகரிக்கும்.

தினமும் காலையில் நந்தியா வெட்டைப் பூக்கள் 2௦ஐப் பறித்து ஒரு கிண்ணத்தில் சுத்தமான நீர் விட்டு அதில் பூக்களைப் போட்டுவிட வேண்டும். மதியம் 2 மணி வாக்கில் பூக்களை எடுத்துவிட்டு அந்த நீரை கண்களில் பலமுறை அடித்துக் கழுவ வேண்டும். இவ்விதம் தொடர்ந்து 9௦ நாட்கள் செய்ய சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.

நெல்லிக்காய் தினம் 2 காய் எடுத்து கொட்டையை நீக்கி சதைப்பற்றை நசுக்கி ஒரு சுத்தமான மெல்லிய துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். அந்த சாற்றை ஒவ்வொரு கண்ணிலும் 2 துளிவிட்டு 5 முதல் 1௦ நிமிடம் கண்களை மூடி வைத்திருக்க வேண்டும். இவ்விதம் தொடர்ந்து 40 நாட்கள் செய்ய பார்வையில் நல்ல குணம் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

எள் செடியில் வெண்மையாக பூத்திருக்கும் பூக்கள் 6௦ஐப் பறித்து, நிழலில் உலர்த்திய பின், மிளகு 9, அரிசித் திப்பிலி 2௦, சம்பங்கி மொக்கு 2௦ கிராம் இவைகளையும் பூக்களையும் வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து முறைப்படி சூரணம் தயாரித்து ஒரு பாட்டலில் போட்டு, தினமும் காலையில் மிளகு அளவுத் தூளை ஒவ்வொரு கண்ணிலும் விட எரிச்சல் உண்டாகும். பின் கண்களில் இருந்து நீர் வடியும். இந்த நீர் வடிவது நின்றவுடன்., சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களில் அடித்து கழுவ வேண்டும். இவ்விதம் ஏழு நாட்கள் செய்ய பார்வை மிகவும் தெளிவு பெறும்.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பார்வைத்திறன் குறைவாக இருந்தால் சிறிய வெங்காயம் 3 எடுத்து தோலுரித்து நசுக்கி ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுக்க வேண்டும். ஓரு ஸ்பூன் வெங்காய சாருடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினசரி குழந்தைக்கு கொடுத்து வர வேண்டும். 4௦ நாட்கள் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டால் குழந்தைகளுக்கு பார்வைத்திறன் அதிகரிக்கும். இதோடு வைட்டமின் 'எ' உயிர்சத்துள்ள உணவுகள், பழங்கள், கீரைகளை வளரும் வயதில் அடிக்கடி கொடுத்துவர வேண்டும்.

மாலைக்கண் நோய் குணமாக:
கருந்துளசியின் இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தம் செய்து அவற்றை நசித்து சுத்தமான மெலிதாக உள்ள ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாற்றை தினசரி ஒவ்வொரு கண்ணிலும் 2 சொட்டு வீதம் தொடர்ந்து 7 நாட்கள் விட்டு வந்தால் பயன்பெறலாம்.

ஓமம் 1௦ கிராம் வாங்கி உள்ளங்கையில் வைத்து 2,3 முறை தேய்த்தால் ஓமத்தின் மேல் உள்ள உமி நீங்கிவிடும். வேப்பங்கொழுந்து இலைகள் கோலி அளவுக்கு பறித்து ½ ஸ்பூன் உப்புத்தூள், மூன்றையும் காரமில்லாத அம்மியில் சுத்தமான நீர் சிறிது விட்டு நைசாக அரைத்து, காலையில் ஒருவேளை விழுங்கி காய்ச்சி ஆறிய நீர் ஒரு டம்ளர் பருக வேண்டும். இவ்விதம் 3௦ நாட்கள் செய்து 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 3௦ நாட்கள் சாப்பிட்டுவர இந்த நோய் குணமாகி நிவாரணம் பெறலாம்.

மிதிபாகல் இலைகள் ½ கைப்பிடி அளவு பறித்து நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்து, மிளகு சேர்த்து, காரமில்லாத அம்மியில் மித நைசாக அரைத்து சாந்தை வழித்து இரவு படுக்குமுன் கண்களை மூடி மேலே ரப்பையின் மீது பற்று போட்டு துணியால் கட்டிக் கொள்ள வேண்டும். காலை அதை எடுத்துவிட்டு சுத்தமான குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். பார்வை சரியாகும் வரை இந்த சிகிச்சையினை தொடர்ந்து செய்துவர வேண்டும்.

கண்ணில் சதை வளருதல் குணமாக:
கண்களுக்கு சரியான முறையில் ரத்த ஓட்டம் இல்லையெனில் அந்த இடத்தில் வளர்ச்சியடையாத செல்கள் தேங்கி விடும். பார்ப்பதற்கு அது சதை வளர்ந்திருப்பது போல் தெரியும்.

பேரீச்சம்பழக் கொட்டைகளைக் காய வைத்து இடித்து முலைப்பால் விட்டு அம்மியில் மிக நைசாக அரைத்து சாந்தை வழித்து இரவு படுக்குமுன் கண்களின் ஓரங்களில் பற்று போட வேண்டும். ஒரு வாரம் தடவி வந்தால் வளரும் சதை மறைந்து போகும்.

பேரீச்சங் கொட்டைகளை 2,3ஐ இடித்து தூளாக்கி அரைத்து கண்ணுக்கு மை தீட்டுவது போல சாந்தை கண்ணின் ஓரத்தில் கீழும் மேலும் தடவி வர வேண்டும். இவ்விதம் 3 நாட்கள் செய்ய சதை காணாமல் போகும்.

கண்களில் கட்டி வருதல்:
உடலில் ஏற்படும் மிகை வெப்பங் காரணமாகவும், கடுமையான வெய்யில், வெளிச்சத்தில் வேலை பார்ப்பதாலும் அனல் அதிகம் வரும் அடுப்பின் அருகில் வேலை செய்யும்போது உஷ்ணம் கண்களைத் தாக்குவதன் மூலமும் கட்டி எற்படுகிறது.

திருநீற்று பச்சிலைகளை 2 கோலி அளவு பறித்து சுத்தமான நீரில் கழுவி 2,3 சொட்டு நீர் விட்டு நசித்து, சுத்தமான மெலிதாக உள்ள ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை 3 மணிக்கு ஒரு முறை கட்டி மீது பூச 2 நாளில் பழுத்து உடைந்து விடும். பின் ஒரு மெல்லிய துணியால் ஒற்றி ஒற்றி சீழை அப்புறப்படுத்த வேண்டும்.

பட்டாணி அளவு சுண்ணாம்பும், ஒரு பூண்டுப்பல்லும் எடுத்து காரமில்லாத அம்மியில் அரைத்து, சாந்தை மேலே கூறியவாறு கட்டி மீது பூசி சிகிச்சை செய்து வர 2,3 நாளில் குணம் காணலாம்.

கண்களில் வெள்ளைப் பூ விழுதல்:
நந்தியாவட்டைப் பூக்கள் 3௦ஐ பறித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கை அகல சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் பூக்களை வைத்து நெல்லி அளவு போல் சிறுமூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாலாடையில் முலைப்பால் நிறைய விட்டு அதில் பூ மூட்டையை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு மூட்டையை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் மூட்டையை இருக்கிப்பிழிய வேண்டும். அந்த சாற்றை எடுத்து பூ விழுந்த கண்ணில் 2,3 சொட்டு தினம் ஒரு வேளை தொடர்ந்து முப்பது நாட்கள் செய்ய பூ மறைந்து விடும்.

முசுமுசுக்கை இலைகள் 3௦ம் ஒரு ஸ்பூன் சீரகமும் எடுத்து இரண்டையும் காரமில்லாத அம்மியில் வைத்து நீர் விட்டு சிதைத்து சுத்தமான வெள்ளையாக உள்ள மெல்லிய துணியில் நசித்ததை வைத்து சிறுமூட்டைப் போல் முடித்து முலைப்பாலை ஒரு சிறு கிண்ணத்தில் நிரப்பி அதில் மூட்டையை 15 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூட்டையை வேறு சிறு கிண்ணத்தில் பிழிந்து வரும் சாற்றில் 2 சொட்டு பூ விழுந்த கண்ணில் காலை 8 மணிக்கும், 11 மணிக்கும், 2 மணிக்கும் வேலைக்கு 2 சொட்டு விட்டு மல்லாந்த நிலையில் கண்களை மூடியபடி ½ மணிநேரம் படுத்திருந்து குளிர்ந்த நீரால் கண்ணை கழுவ வேண்டும். இவ்விதம் 3 நாட்கள் செய்து வந்தால் பூ மறைந்து விடும். மறையவில்லைஎனில் மேலும் 3 நாட்கள் சிகிச்சையை தொடர வேண்டும்.

கண் எரிச்சல் குணமாக:
சிற்றாமணக்கு எண்ணெய் 5௦ மில்லி வாங்கி இரவு படுக்குமுன் ஒவ்வொரு கண்ணிலும் 2 சொட்டு விட்டு படுத்துக் கொள்ள வேண்டும் இரண்டு நாட்கள் செய்ய எரிச்சல் அடங்கும்.

சோற்றுக் கற்றாழையின் சதைப் பற்றை 1 அங்குல துண்டு எடுத்து கண்ணை மூடி மேலே இரப்பையில் வைத்து துணியால் கட்டிக் கொண்டு 4 மணி கழித்து எடுத்து விட வேண்டும். இவ்விதமாக காலை, மாலை செய்ய ஒரே நாளில் எரிச்சல் குறையும்.

நந்தியாவட்டைப் பூக்கள் 2௦ஐப் பறித்து இரவில் படுக்குமுன் ஒரு கண்ணுக்கு 1௦ பூ வீதம் கண்ணை மூடி ரப்பை மீது வைத்து துணியால் கட்டிக் கொள்ள வேண்டும். 2,3 நாட்கள் செய்ய எரிச்சல் நிற்கும்.
நாட்டுமருந்து கடையில் சுத்தமான பன்னீர் வாங்கி காலை, மதியம், மாலை வேளைக்கு ஒவ்வொரு கண்ணிலும் 2 சொட்டு விட வேண்டும். 3 நாட்கள் செய்ய சரியாகும்.

அகத்திகீரை பிடி வாழ்வு எடுத்து சுத்தமாக்கி ஒரு சிறு கரண்டி அளவு பருப்புடன் வேக வைத்து அதில் சிறிதளவு தேங்காய்ப் பால்விட்டு மதிய உணவுடன் 3 நாட்கள் சாப்பிட எரிச்சல் குறைந்து சுகம் பெறலாம்.

கண்களில் நீர்வடிதல் குணமாக:
இரவு படுப்பதற்கு முன்பு 2,3 சிறிய வெங்காயத்தை தோலுரித்து நசுக்கி மெலிதான ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாற்றில் ஒரு கண்ணுக்கு ஒரு சொட்டுவீதம் விட்டுக் கொண்டு படுத்துவிட வேண்டும். இவ்விதம் 3 நாட்கள் இதைச் செய்ய நீர் கசிவது நின்று விடும்.

நெல்லிக்காயை பத்து எடுத்து சதைப்பற்றை எடுத்து அதை நசித்து ரசமாக்கி அதல் 2 ஸ்பூன் தேன் கலந்து 2,3 நாட்கள் சாப்பிட குணம் பெறலாம்.

தினசரி இரவு படுக்கும் முன்பு ஒவ்வொரு கண்ணிலும் 2 சொட்டு விளக்கெண்ணை விட்டு படுத்துவிட வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவ வேண்டும். 3 நாட்கள் இவ்விதம் செய்துவர நீர் வடிவது குறைந்துவிடும்.

கண்ணில் ஏற்படும் புரை விழுதல் குணமாக:
கொண்டைக்கடலையை 12 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை மாற்றிவிட்டு வேறு தண்ணீர் விட்டு 6 மணி கழித்து தண்ணீரை நீக்கி ஊறிய கடலையை ஒரு கைக்குட்டையில் வைத்து முடித்து மறுநாள் காலை பார்க்க முளைவிட்டிருக்கும். இதை சுண்டல் செய்து சாப்பிட வேண்டும். கைப்பிடி அளவு சுண்டலை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர புரை காணாமல் போகும்.

வேப்பங் கொழுந்துகள் நெல்லிக்காயளவு சேகரித்து சுத்தம் செய்து நசித்து ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து முறுக்க வரும் சாற்றை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு சொட்டு வீதம் தினசரி விட்டுவர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

அதிகாலையில் சூரிய உதய நேரத்தில் 6.30 மணி முதல் 7 மணிக்குள், சூரியனின் எதிர்பக்கம் நின்று கண்களை மூடிக்கொண்டு சூரியனின் ஒளி கண்ணின் ரப்பை மீது படும்படி பத்துநிமிடம் நிற்க வேண்டும். இவ்விதம் தொடர்ந்து 15 நாட்கள் செய்ய சூரியக்கதிர் மூலம் கண்களுக்கு போதுமான ரத்தம் கிடைத்து அதனால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

கண்களின் வெண்படலம் சிவப்பாக இருத்தல்:
சோறு வடித்த பின் மிதசூடாக ஒரு எலுமிச்சை அளவு சோற்றை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து சிறு மூட்டையாகக் கட்டி கண்களை மூடி ரப்பையின் மீது 4,5 முறை காலை, மாலை 2 நாட்கள் ஒத்தடம் கொடுத்தால் சிகப்பு மாறிவிடும்.

இரவுப் படுக்கும் முன்பாக எள்பூக்கள் 5௦ஐ சேகரித்து ஒரு சிறிய சட்டியில் ½ ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அதில் பூக்களைப் போட்டு வதக்க வேண்டும். இரவு தூங்கும் முன்பு கண்களை மூடி ரப்பையின் மேல் வதக்கியதை 2 பங்காக்கி ஒவ்வொரு கண்ணின் மேல் வைத்து துணியால் கட்டு கட்டி காலையில் அவிழ்த்து குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவ வேண்டும். 3 நாட்கள் செய்ய சிவப்பு நிறம் மாறி வெண்மை தோன்றும்.

கண்களின் கீழ் கருவளையம் நீங்க:
ஒரு ஸ்பூன் கசகசா ½ ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு பாதாம் பருப்பு மூன்றையும் காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்து ½ மணி நேரம் கழித்து காரமில்லாத அம்மியில் நைசாக அரைத்து சாந்தை கண்ணைச் சுற்றிலும் இரவு படுக்கு முன் பற்று போட்டுக் கொள்ளவேண்டும். 3 நாட்கள் செய்ய கருவளையம் மறைந்து விடும்.

சாதிக்காயை தேய்த்து வரும் சாந்துடன் 1 ஸ்பூன் தேன் கலந்து கருவளையத்தின் மேல், இரவு படுக்குமுன் பூசிக் கொள்ள வேண்டும் 3 நாட்கள் இதைச் செய்ய கருவளையம் காணாமல் போகும்.

கனிந்த பப்பாளிப்பழத்தை ஸ்பூனால் கூழ்போல் செய்து கருவளையத்தின் மீது காலை, மதியம், மாலை 3 வேளை 3 நாட்கள் பூசி வர வேண்டும். குழம்பை பூசி 15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ள குணமாகும்.

வெள்ளரிப் பிஞ்சை பன்னீர் விட்டு காரமில்லாத அம்மியில் மிக நைசாக அரைத்து மூன்று வேளை பூசி வர கருவளையம் மறைந்து விடும்.

நாட்டு மருந்து கடையில் பாதாம் எண்ணெய் 5௦ மில்லி வாங்கி 5௦ மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கலக்கி தினமும் இரவு படுக்குமுன் கருவளையத்தின் மீது பூசிவர வேண்டும். 3௦ நாட்களில் கருவளையம் மறைந்துவிடும்.

நன்றி : சித்த மருத்துவத்தில் கண்கள் பாதுகாப்பு
– க. சின்னசாமி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...