வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி கொண்டுள்ளார்

தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள்பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்புதெரிவித்துள்ளார்.

அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவுபடுத்துவதற்கே எழுதப்பட்டது.

* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம்உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்துகொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?

* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாக கொள்ளப்படுகிறார்.

பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப்பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல்கொண்டாள்.

நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.

*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.

*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இதுபோன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?

*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப் பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவைநோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...