மிக மிக மிகத் தவறான முன்னுதாரணம்!

இப்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், தலைமை நீதிபதிக்கு எதிராகத் தங்கள் குறைகளை முன் வைப்பது மிக மிக மிகத் தவறான முன்னுதாரணம்!

நாளை ஏதோ ஒரு வங்கியின் சேர்மனுக்கு எதிராக அவரது செயல்பாடுகள் குறித்து, அந்த வங்கியின் ஜெனரல் மேனேஜர்கள் சிலர் 'பிரஸ் மீட்' வைப்பார்களா?

மாவட்ட கலெக்டரின் ஒரு சில செயல்பாடுகள் தங்களுக்கு ஒப்பவில்லை என்றால், உடனே தாசில்தார், RDO, டெபுடி கலெக்டர்கள் எல்லாம் நேராக ஊடகங்கள் மத்தியில் குரல் எழுப்புவார்களா?

ஒரு மாநில காவல்துறை IG / DIG யின் செயல்பாடுகளில் தங்களுக்கு ஏதேனும் குறை தென்பட்டால் உடனே எல்லா மாவட்ட SP / DSP/ கமிஷனர்கள் எல்லாம் கூடி, 'பிரஸ் மீட்' நடத்தி IG மீது குற்றம் சுமத்துவார்களா?

ஊடகங்கள் இதைப் பரபரப்புக்காக ஆதரித்து தூபம் போடுவது மிக அபாயகரமான செயல். ஊடகங்களின் செயல்பாடு ஜனநாயகம் இல்லை தறுதலைத்தனம். (NOT DEMOCRACY – BUT ANARCHY).

இந்த தேசத்தின் ஸ்திரப்படுத்தப்பட்ட அமைப்புகள் சரிய வேண்டும். ESTABLISHED INSTITUTIONS OF THIS COUNTRY ARE TO BE DESTABILSED: THIS IS THE ULTIMATE AIM OF ANTI NATIONALS: தேசவிரோத சக்திகளின், கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு சக்திகளின் இறுதி லட்சியம் இந்த நாட்டின் நிர்வாக அமைப்புகள், ஸ்திரப் படுத்தப்பட்ட மதிப்பீடுகள் (ESTABLISHED VALUES IN ADMINISTRATION, CULTURE AND GENERAL SOCIAL LIFE) அனைத்தும் தகர்க்கப்பட வேண்டும்; கட்டுடைக்கப்பட வேண்டும் என்பதே. இதற்கு மீடியாக்கள் அபாரமாகத் துணை போகின்றன.

இந்த மாட்சிமை தங்கிய நீதிபதிகள் CONSTITUTIONAL HEAD ஆகிய குடியரசுத் தலைவரையோ, EXECUTIVE HEAD ஆகிய பிரதமரையோ சந்தித்து முறையிடாமல் பத்திரிகையாளர்களை அழைத்து ஏன் முறையிடுகின்றனர்? பிரதமரையோ, ஜனாதிபதியையோ சந்தித்துப் பயனில்லை என்று உணர்த்த முனைகிறார்களா? சட்ட அமைச்சரையாவது சந்தித்து இருக்கலாம் : ஆனால் பிரஸ்மீட் நடத்தி ஊரைக் கூட்டும் அவசியம் என்ன? இதை ஊடகங்கள் தலை மீது வைத்துக் கொண்டாடும் ரகசியம் என்ன?

பிரதமர் மோடி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: எங்கோ போகிறது தேசம் – கட்டவிழ்த்து விட்ட சுதந்திரத்தால்! இப்படி பிரஸ்மீட் நடத்திய நீதிபதிகளை IMPEACHMENT செய்ய வேண்டும்.

நாளை ராணுவ ஜெனரலைப் பற்றிப் புகார் கூறி, கர்னல்கள் பிரஸ்மீட் வைத்தால் அதையும் இந்தப் பொறுப்பற்ற ஊடகங்கள் பரபரப்பாக்கும்! அப்படி இந்த தேசத்தின் கட்டுக்கோப்பு சகல துறைகளிலும் குலைவதுதான் பிரிவினை வாத சக்திகளின் நப்பாசை!

THE JUDGES' PRESS MEET IS THE WAKE-UP CALL FOR THE MODI GOVT, NOT THE ULTIMATE, BUT SURELY DANGEROUS!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரி ...

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரின் செய்தி மதிப்பிற்குரிய பிரமுகர்களே,விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...