அரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய கொடியேற்றினார்.
குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இதை தடுக்கும் விதமாக கேரள அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த சுற்றறிக்கையில் ‘ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்தபள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே குடியரசு தினத்தன்று கொடியேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும்’ என சுற்றறிக் கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. கேரள அரசின் இந்த உத்தரவு, பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. மோகன் பகவத் கொடியேற்றக்கூடாது என்று கேரள அரசு மறைமுகமாக தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியது. திட்டமிட்டபடி, தனியார்பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில் மோகன் பகவத் தனியார் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.