மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி துபாயில் இந்துகோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அபுதாபியில் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டிடங்கள் மின்விளக்குகள் மின்னின.
அபுதாபியில் பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, ரயில்வே, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களை செய்துகொண்டார்.
இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக துபாயில் இந்துகோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். போகசன்வாசி ஸ்ரீஅக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் கோயில் துபாய் நகரில் காட்டப்படுகிறது.
மேலும் துபாயில் இந்துகோயில் கட்டப்படுவதற்கு 125 கோடி இந்தியர்கள் சார்பில் இளவரசருக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.