நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து உடற் பயிற்சி செய்வது அவர்களுக்குப் பல வழிகளிலும் பயன் தருவதாக அமைகிறது.
முக்கிய உடற்பயிற்சிகள்
நடைபயிற்சியை மேற்கொள்வது
நீச்சலடிப்பது-நீந்துதல்
வேறுபலவிதமான உடற்பயிற்சிகள்
செய்யத் தகுந்த உடற்பயிற்சிகள்
வேகமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
எடுத்துக்காட்டு: நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது, ஸ்கிப்பிங் பழகுவது…
தேவையான முன் எச்சரிக்கை
உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, முன் எச்சரிக்கையாகக் கைவசம் சர்க்கரை கலந்த தின்பண்டங்கள் (சாக்லேட், குளுகோஸ் பவுடர் போன்றன) மற்றும் மாவுச் சத்துள்ள பிஸ்கட், சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறும் பழங்களின் சிறு துண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
உடல் சோர்வு, தலை சுற்றல் போன்றவை ஏற்படும் போது உடனே இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்யக்கூடாதன
இன்சுலின் போட்டுக்கொண்டு, உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.
எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.
இவ்விரு சூழ்நிலைகளில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் காரணமாக தலைசுற்றல், மயக்கம், தளர்ச்சி என அளவில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |