ஐ.என்.எக்ஸ் மீடியாவழக்கில் மாஜி நிதி அமைச்சரின் மகன் கார்த்திசிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார் என சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையின் போது இந்திராணி கூறினார். இருவரையும் ஒன்றாகவைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்தி சிதம்பரம் பதில் ஏதும் கூறமுடியாமல் திணறினார்.
கடந்த 3 நாட்களாக காவலில்வைத்து சிபிஐ அதிகாரிகள் துருவிதுருவி கார்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணியை அழைத்து இரு வரிடமும் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுதர கார்த்திசிதம்பரம் 3.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கார்த்திசிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தவழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கார்த்தியை டில்லியிலிருந்து மும்பை அழைத்துவந்த சிபிஐ அதிகாரிகள், சிறையில் உள்ள இந்திராணி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடந்த அப்போது இந்திராணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பலகேள்விகளை எழுப்பினர். இதற்காக பல ஆதாரங்களையும் காட்டினர்.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், விசாரணையில் இந்திராணி பல்வேறு வாக்கு மூலங்களை அளித்துள்ளார். அதன்படி
* ஹயாட் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தேன்.
* 1 மில்லியன் அமெரிக்கடாலர் (6. 5 கோடி ) பணம் வேண்டும் என கார்த்தி கேட்டார்.
* 3.5 கோடி ரூபாய் பணம் டிபாசிட் செய்யப் பட்டு விட்டதாக தெரிவித்தேன்.
* பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் இந்திராணி விளக்கினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டை நேரிடையாக இந்திராணி வைத்ததால் கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும்நெருக்கடி ஏற்பட்டது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் திணறினார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.