‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) உருவாக்கியுள்ள பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க ஏஜென்சிகள், உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு உதவும். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க பாரத் போல் அமைப்பு உதவி செய்யும்.
சர்வதேச போலீஸ் உதவியை விரைவாக அணுக முடியும். சி.பி.ஐ.,யால் உருவாக்கப்பட்ட பாரத்போல் போர்டல், நமது விசாரணை நிறுவனங்களின் உலகளாவிய அணுகலை மேம்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான பாரதம் என்ற அரசாங்கத்தின் பார்வையை நிறைவேற்றும். இன்று ஒரு முக்கிய நாள். நமது நாட்டின் சர்வதேச விசாரணைகளை பாரத்போல் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும். குற்றங்களை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |