ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீமுனுகுராம லிங்கசாமி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை யொட்டி ஆந்திர மாநிலத்தில் இந்தாண்டு எப்படிஇருக்கும் என்றும் கோவில் கொடிமரம் அருகே பஞ்சாங்கம் படித்தார்.
ஆந்திரமாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019ம்) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படும். தெலுங்கானாவில் மீண்டும் அதே அரசு தலைமையிலான ஆட்சிநடக்கும். டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடந்தால் மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தால் பா.ஜனதாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு எம்பி. சீட்கூட கிடைக்காது.
உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் பாஜ.வுக்கு பெயரளவுக்கு மட்டுமே எம்.பி. சீட் கிடைக்கும்.
நடிகை ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது இல்லை. தமிழகத்தில் ரஜினி காந்தின் அரசியல்படம் வெற்றியடையும்.
ஆந்திர மாநிலத்தில் விவசாயத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு வளர்ச்சிஇருக்காது. இதற்கு காரணம் வானிலை மாற்றங்கள் விவசாயிகளுக்கு சாதகமில்லாத நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி விசாகா சாரதா பீடாதிபதி சொரூபா நந்தேந்திரா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியேவந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கு புத்தாண்டான விளம்பி நாமஆண்டால் ஆந்திராவுக்கு நற்பலன்கள் கிடைக்காது.
இதனால் மாநிலத்தில் ஏராளமான அளவில் குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதற்குதீர்வாக விசாகா சாரதா பீடத்தில் சாந்தி ஹோமம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. சாந்தி ஹோமத்திற்கு ஏழுமலையான் ஆசிவேண்டியே இங்கு வந்தேன் என்றார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.