திரு ஸ்டாலின், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு என்னும் நெருப்பு அணையாது."
ஸ்டாலின் அவர்களே,
முதலில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் என்னும் கருப்பை அகற்றுங்கள்.
திரு பென்னி குயிக் என்னும் ஆங்கிலேயர் தனது சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டியதாக சொல்வார்கள்.
கடந்த 50 வருடங்களில் உங்கள் கட்சி மாநிலத்திலும் மத்தியில் கூட்டணியாக ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு மிக அதிகமாக முறைகேடாக சொத்து குவித்ததாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்றும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தான் சர்க்காரியா கமிஷன் குற்ற சாட்டில் இருந்து விடுபட திருமதி காந்தியிடம் சரண் அடைந்து 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், கர்நாடகாவில் அணைகள் கட்ட அனுமதி அளித்ததன் விளைவே இன்றும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சொல்லி வருகிறார்கள்.
எனவே முறை கேடாக சேர்த்த சொத்தைக் கொண்டு தமிழகத்தில் காவிரியின் குறுக்கே சிறு சிறு அணைகளை கட்டி அதிகமாக மழை பெய்யும் காலங்களில் வரும் உபரி நீரை சேமித்து வறட்சியான காலங்களில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஏழை விவசாயிகளின் துயரை உங்கள் குடும்பம் துடைக்கலாமே.
தமிழகம் தாழ்வு பிரதேசமாக இருப்பதால் மேட்டுர் போன்ற பெரிய அணைகள் கட்டுவது சாத்தியமில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.எனவே பல சிறு அணைகள் கட்டுங்கள்.
அதன் மூலம் ஓரளவு உங்கள் குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் கறையை நீக்கலாம்.
அதுவரை நீங்கள் என்ன நடை போட்டாலும் ஆட்சி என்னும் கட்டிலில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நேர்மை என்னும் வெள்ளையை அணிந்து கொண்டு இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையின் வளமான வாழ்வுக்கும் பாடுபட்டு வரும் மோடி என்னும் ஜீவ நதி, உங்களைப் போன்ற ஊழல் இரட்டைவாதிகள் தவறான முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் கலவரம் மற்றும் பிரிவினை என்ற நெருப்பை மூட்ட முயன்றால்,அதை அணைத்து போகும் இடங்களில் எல்லாம் பசுமையை உண்டாக்கும்.
போகும் இடங்களில் எல்லாம் நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.