நடப்பு ஆண்டின் பணவீக்கம் 9.10 சதவீதமாக உயரும்

தனியார் துறை தர நிர்ணய அமைப்பான கிரிசில், நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.50 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது. இவ் வமைப்பின் முந்தைய மதிப்பீட்டின்படி, பொருளாதார வளர்ச்சி 7.70-8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க பொருளாதார சீர்குலைவு, ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை, அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பொது பணவீக்கம், அதன் காரணமாக கடந்த 19 மாதங்களில் 3.50 சதவீதம் வரையிலான வட்டி வீத உயர்வு போன்ற காரணங் களால் பொருளாதார வளர்ச்சி 7.50 சதவீத அளவுக்கே இருக்கும் என கிரிசில் அதன் மறு மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது. இதே போல், ஃபிட்ச் தர நிர்ணய நிறுவனமும், சிட்டி குழுமமும் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்களது முந்தைய மதிப்பீடுகளை முறையே 7.50 மற்றும் 7.70 சதவீதங்களாக குறைத்துள்ளன.

நடப்பாண்டின் தொடக்கத்தில், பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்திருந்த மத்திய அரசு, மேற்கூறிய காரணங்களால் அதன் மதிப்பீட்டை 8.20 சதவீதமாக திருத்தியமைத்தது.

அதேபோல், நடப்பு ஆண்டின் பணவீக்கம் தற்போதைய மதிப்பீடான 8.50 சதவீத்திலிருந்து 9.10 சதவீதமாக உயரும் என்றும், நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டுள்ள 4.60 சதவீதத் திலிருந்து 5.20 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள கிரிசில், நடப்பு கணக்கு பற்றாக்குறை மாற்றங்களின்றி 2.60 சதவீதமாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...