தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்

மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொதுகூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

மத்தியில் பாஜக.ஆட்சி வருவதற்கு முன் பலகாலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டுவந்தனர்.

10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்தபோதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக்கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் திமுக.காரர்கள்.

மத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம்தான் செய்தனர்.

மத்தியில் பாஜக.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான்யோசித்தது தமிழகத்தில் எந்தபகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பதுதான்.

மதுரை தோப்பூரை பற்றி எனக்குதெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன்பெறும் என்றுதான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை.

மதுரைக்கு வரவேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என்மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம்கூட இருக்கும்.
 

நான் மத்திய சுகாதாரதுறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றிதான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர்மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்க வில்லை.

தமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரைலட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்து உள்ளது மோடி அரசு இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...