ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி

“தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார். தமிழகத்திற்கு, 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது,” என, மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்த பின், அவர் அளித்த பேட்டி: ஐந்து முறை ஆட்சி செய்த அ.தி.மு.க.,வுடன், அண்ணாமலை கூறியதால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை குறிவைத்து அ.தி.மு.க., போட்டியிட்டது. ஆனால், அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. சிறுபான்மையின ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவில்லை.

அதேநேரம், சொன்ன வாக்குறுதிகள் எதையும் செய்யாததால், ஓட்டளித்த தி.மு.க., மீது சிறுபான்மையின மக்கள் கோபத்தில் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தால் மக்கள் கோபம் அவருக்கும் புரியும்; தெரியும்.

வரும் தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை. தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஹிந்து சமய அறநிலையத் துறையை அகற்றுவோம்.

எங்களது இந்தக் கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.

தே.ஜ., கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது தொடர்பாக, கடந்த தேர்தலின் போது 36 பக்க வெள்ள அறிக்கை வெளியிட்டோம்.

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 36,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில், தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும்.

தங்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குறை சொல்வதை மட்டுமே முழுநேர வேலையாக, தி.மு.க., அரசு செய்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால், தமிழகத்தில் எந்த மாற்றமும் நடந்து விடப்போவதில்லை. பிரதமர் மோடி தமிழகம் வரும் போது முதல்வர் ஸ்டாலின் போட்டி போட்டு சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தி.மு.க., அரசு, கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. கவர்னர் குறித்து தி.மு.க.,வினர் அவதுாறாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

தேசிய கட்சித் தலைவர் ஒருவர், தங்களோடு கூட்டணி சேருமாறு நடிகர் விஜயை சமீபத்தில் அழைத்தார்.

தமிழகத்தில் காணாமல் போகும் நிலையில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம், இன்று விஜயை தங்களுக்கு துணையாக அழைத்துக் கொண்டிருக்கின்றன.

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை, தயவு செய்து 10 சதவீதமாவது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது என் கடமை. விஜயை, வருந்தி வருந்தி கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் தான், அக்கட்சி உள்ளது; பரிதாபம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது – அண்ணாமலை  குற்றச்சாட்டு 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...