மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், பாஜக ஆட்சி அமைக்கபடும் என மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் மஜத-காங்கிரஸ் அரசு வெகுவிரைவில் கவிழப்போகிறது. கூட்டணி அரசு கவிழ்ந்ததும், ஜனநாயக கடமையை ஆற்றும்வகையில், மக்களின் ஆதரவுபெற்றுள்ள பாஜக தனது ஆட்சியை அமைக்கும்.
முதல்வர் குமாரசாமி அரசு மிகவும் குழந்தைத் தனமாக நடந்துகொண்டுள்ளது. இந்த அரசை வீழ்த்துவதற்கு பாஜக எந்த முயற்சியையும் எடுக்க தேவையில்லை. உள்பூசலால் கூட்டணி அரசு தானாகவேவீழும். கூட்டணி அரசு எப்போது கவிழும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக் கிறார்கள். அரசியலில் என்றுமே வெற்றிடம் இருப்பதில்லை. இந்த அரசும் தன் சொந்த உள்பூசல்களால் கவிழும் என்பதில் சந்தேகம்தேவையில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். ஆனால் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. மஜத மற்றும் காங்கிரஸ்கட்சிகள் பொருத்தமில்லாத, புனிதமற்ற கூட்டணியை அமைத்துள்ளன.
கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே இருகட்சிகளுக்கும் இடையே பனிப் போர் நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே பகைமை உணர்வுள்ளது. இந்தநிலையில் இருகட்சிகளும் எப்படி ஒற்றுமையாக ஆட்சி நடத்த இயலும்? அதனால்தான் கூறுகிறேன் கூட்டணி அரசு கவிழ்வது உறுதி.
தெலங்கானா மாநிலம், கர்நாடக நிலப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது சரி அல்ல. எல்லா மாநிலங்களுக்கும் எல்லைகள் உள்ளன. நிலம், நீர், எல்லைகளை பாதுகாக்கும்பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உள்ளன. இந்தவிவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில முதல்வருடன் நம்முதல்வர் குமாரசாமி பேசவேண்டும் என்றார்
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.