மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.
“பலன் தரும் செயல்களில் வெற்றியை விரும்பும் இவ்வுலக மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர். இவ்வுலகில் இத்தகு செயல்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பது உண்மையே.
என்னைப் பாதிக்கும் செயல் எதுவும் இல்லை; செயல்களின் பலன்களை நான் விரும்புவதும் இல்லை. என்னைப் பற்றிய இவ்வுண்மையை அறிபவனும் செயல்களின் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.
சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.” – ஸ்ரீமத் பகவத் கீதை
வாழ்வியல் முறையின் தத்துவத்தை சொல்லும் கீதை என்னும் அற்புத சாரத்தை உலகிற்கு அளித்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த இந்த புனிதமான நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு மகிழ்ச்சியாக வாழவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திடவும் மனமார பிரார்த்திக்கிறேன்.
தர்மத்தை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு உற்ற துணையாக நின்று அறவழியில் அவருடன் பயணிக்க நாமும் உறுதி கொள்வோம்.
அனைவருக்கும் என் மனமார்ந்த கிருஷ்ணா ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
– பொன். இராதாகிருஷ்ணன்
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.