யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ‘இது பெருமைமிக்க தருணம்’ என, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காக, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் சார்பில், சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.

இதில், ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் அவற்றின் நெறிமுறைகள், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய, ‘விண்ட்ஹோக்’ பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்தாண்டு, ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக -லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய — பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப் பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், புதிதாக 74 ஆவணங்கள் கடந்த 16ம் தேதி சேர்க்கப்பட்டு உள்ளன.

ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

இதன் வாயிலாக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அறிவிப்பை தன் சமூக வலைதள பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்.

‘காலத்தால் அழியாத நம் ஞானத்திற்கும், வளமான கலாசாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்.

‘கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நுாற்றாண்டுகளாக நாகரிகத்தையும், உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறன் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது’ என, கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...