மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது விலைவாசி உயர்வு விவகாரத்தில் குற்றபதிவு கொண்டிருந்தது. ஆனால் அக்கட்சி தற்பொழுது முதலை கண்ணீர் வடித்துவருகிறது.
காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கப்பல். அதனுடன் கூட்டுசேரும் எந்த கட்சியும் மூழ்கிவிடும். அதனாலேயே அக்கட்சி விடுத்த பாரத் பந்தில் கலந்து கொள்ளாமல் பல கட்சிகள் புறக்கணித்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பிரதமர் மோடி பதவியேற்ற பொழுது பணவீக்கம் 11 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை தனது கொள்கைகள் மற்றும் நேர்மையான பணியால் 4 சதவீதம் என்ற அளவிற்கு அவர் கொண்டு வந்துள்ளார் என கூறினார். இந்தசதவீதம் இன்னும் குறையும் என்ற தனது நம்பிக்கையையும் நக்வி வெளிப்படுத்தி உள்ளார்.
வன்முறை மற்றும் அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.