இம்ரான்கான் ஐஎஸ்ஐ.,க்கு பியூன் வேலை செய்பவர்

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பியூன் வேலை செய்துவருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பி மணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

நியூயார்க் நகரில் ஐ.நா.சபை பொதுக் கூட்டம் நடந்துவருகிறது. இதில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பேசிவருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெஷாவரில் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளித்தது என்று குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தும் இந்தியா நிராகரிக்கிறது என்றும் புகார் கூறினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ஈனம் கம்பீர் ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்நிலையில் அகர்த்தலாவில் சமஸ்கிருத கவுரவ் சனஸ்தான் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று வந்திருந்தார். ,அப்போது, சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் ஒன்றுமில்லை, பாகிஸ்தானின் ராணுவம், தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஐஎஸ்ஐ அமைப்பின் எடுபிடி(பியூன்) வேலைசெய்பவர். அவரை பொதுவாக அனைவரும் பிரதமர் என்கிறார்கள், உண்மையில் இம்ரான் கான் செய்துவருவது பியூன் பணிதான்.

பாகிஸ்தானுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. பாகிஸ்தானின் பகுதியாக இருக்க பலுசிஸ்தான் விரும்பவில்லை, சிந்திமக்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்திருக்க விருப்பமில்லை, அதேபோல பஸ்துன்களும் எதிர்க்கிறார்கள். ஆதலால் பாகிஸ்தானை 4 பிரிவுகளாகப் பிரித்து, அதில் 3 பிரிவுகளை பலூச், சிந்தி, பஸ்துன்களுக்கு பிரித்து கொடுத்து மேற்கு பஞ்சாயை மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

ஐ.நா.சபையில் பாகிஸ்தானைப் பற்றிப் பேசி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய நேரத்தை வீணாக்கக்கூடாது. ஏனென்றால் இந்தியாவைச் சீண்டும் போது, பாகிஸ்தான் மன ரீதியாக மகிழ்ச்சி கொள்கிறது. பாகிஸ்தான் பற்றி கண்டுகொள்ளாதீர்கள். நம்முடைய ராணுவத்தை எந்தநேரமும் தயாராக வைத்திருந்து பாகிஸ்தானை 4 பகுதிகளாக உடைக்கத் தயாராக இருக்கவேண்டும்.

வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஆனால், வங்கதேச பிரதமர் ஷேக்ஹசினா அங்குள்ள இந்து கோயில்களை இடிக்காமல் தடுத்து, அவ்வாறு செய்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கவேண்டும். இந்து கோயில்களை மசூதிகளாகவும், இந்துக்களை முஸ்லிம்களாகவும் மாற்று வதையும் தடுக்கவேண்டும். வங்கதேசம் இந்துக்களைத் தொந்தரவு செய்தவதை நிறுத்தா விட்டால், எங்கள் அரசு உங்கள் நாட்டில் தலையிட வேண்டியது இருக்கும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...