செங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம் அமையவிருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பாராளுமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு நட்டா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், “1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் மத்திய அமைச்சர வையில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. செங்கல் பட்டில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள நோய் தடுப்பு மையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளை தொடங்க மத்திய அரசு 150 கோடி நிதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.