அமிர்தசரஸ் ரயில்விபத்து : தசரா விழா இந்தியா முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ்ஸில் கொண்டாடப்பட்ட தசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத் திருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இருக்கும் ஜோரா பதாக் என்ற பகுதியில் ராவணவதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வான வேடிக்கைக்காக பட்டாசுகள் வாங்கி கொளுத்தியபோது, பட்டாசுகள் தாறுமாறாக வெடிக்கத் தொடங்கியது.
சிறுகாயங்களுக்கு பயந்து அங்குமிங்கும் மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அருகில் இருக்கும் தண்டவாளம் வழியே சிலர் ஓட முயன்றபோது, அந்த வழியே வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த கூட்டத்தில் மோதியது.
இந்த கோர விபத்தினால் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த கோரநிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகுறித்து டில்லியில் விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் மக்கள் கூடிநிற்பது விதிமீறல் ஆகும். ரயில்பாதையை ஒட்டிய பகுதியில் நிகழ்ச்சி நடத்துவதற்காக எந்த அனுமதியும் பெறப்பட வில்லை.
ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறப் படாததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாததும் தான் இந்த விபத்திற்கு காரணம். இந்தவிபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
தசரா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நாடகத்தில், வழக்கமாக ராவணன் வேடமிடும் தல்பிர்சிங் என்பவரும் உயிரிழந்தார்.
நாடகம் முடிந்த பின்னர் ராவணன் உருவபொம்மை எரிக்கப் படுவதையும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளையும் பார்க்க தல்பிர் சிங்கும் அருகில் சென்றார். மக்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி ரயில் அதிவேகமாக வருவதைபார்த்த தல்பிர்சிங், எச்சரிக்கை மணியை ஒலிக்க முயற்சி செய்தார். அதற்குள் ரயில்மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.