ரயில் போக்குவரத்தில் ஜம்மு – காஷ்மீரை, நம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் வகையில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்., 19ம் தேதி துவக்கி வைக்கிறார்.
மலைப்பாங்கான பகுதியில் ஜம்மு – காஷ்மீர் அமைந்துள்ள நிலையில், அங்கு ரயில் போக்குவரத்தை இயக்குவது மிகுந்த சவாலாக உள்ளது. எனினும், இதை சாத்தியமாக்கும் வகையில் ஜம்மு – காஷ்மீரின் உதம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா இடையே உள்ள 272 கி.மீ., தொலைவு ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில், கட்ரா – பானிஹால் இடையேயான 111 கி.மீ., தொலைவு உள்ள ரயில் இணைப்பின் பணி மட்டும் நிறைவுபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இத்திட்டம் முடிவுற்ற நிலையில், கடந்த ஜனவரியில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் திட்டத்தை, பிரதமர் மோடி ஏப்., 19ம் தேதி கட்ரா ரயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாதா வைஷ்ணவதேவி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் ஏராளமான யாத்ரீகர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் ரயிலில் பயணம் செய்ய வழிவகை ஏற்படும். இதேபோல், நம் நாட்டின் பிற நகரங்களில் இருந்தும், ஜம்மு – காஷ்மீருக்கு ரயிலில் பயணிக்க இயலும்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |