உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் உறவினர்களை இழந்தவர்களுக்கு கடவுள் வலிமையை வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
உன்னாவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |