சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதி ஐந்து நிதி ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாகுறையும் அதிகரித்துள்ளது. எனவே சீனாவிலிருந்து வரும் பல்வேறுபொருள்கள் இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது .
ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி உயரும்போது வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. சீனாவிற்கு இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதால் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்ளது.
2010-11-ஆம் நிதி ஆண்டில் சீனாவிலிருந்து 4,350 கோடி டாலர் மதிப்பிற்கு பல்வேறு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2006-07-ஆம் ஆண்டு இறக்குமதியுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகமாகும். அதே சமயம், சென்ற நிதி ஆண்டில் சீனாவிற்கான ஏற்றுமதி 1,960 கோடி டாலர் அளவிற்கே இருந்தது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 680 கோடி டாலராக இருந்தது.
சீனாவிலிருந்து உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது மின்னணு பொருட்களின் இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆயத்த ஆடைகள் அல்லாத ஜவுளி ரகங்கள் இறக்குமதி 28 சதவீதம் உயர்ந்துள்ளது. விளையாட்டு பொருள்கள் மற்றும் ரப்பர் பொருள்கள் இறக்குமதி முறையே 8.59 சதவீதம் மற்றும் 30.41 சதவீதம் அதிகரித்துள்ளது. காலணிகள் இறக்குமதி 25 சதவீதமும், காகிதம்-மரச் சாமான்கள் இறக்குமதி 41 சதவீதமும் உயர்ந்துள்ளது.
பொதுவாக சீனப் பொருட்களின் இறக்குமதியால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சீனாவிலிருந்து வரும் சில பொருள்கள் மீது ஏற்கனவே பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கவலையளிக்கும் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதால் சீனப் பொருள்கள் மீது இனி இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.