மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது

அகமதாபாத்தில் சர்வதேச நிதி சேவைமைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச நிதிநிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. தற்போது அந்தவரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அத்துடன் மிகஅதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும்திகழ்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் மிகப் பெரும் தேக்க நிலை உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் இந்தியாவின் பொருளாதார சூழலும் பாதிப்புக் குள்ளானது.

அந்தசமயத்தில் குஜராத் மாநிலம் நிதித் துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அப்போது உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்து ஐஎப்எஸ்சிஏ இங்குஉருவாகும் நிலை எட்டப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியிலும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரும் ஒன்றிணைந்தது. இதில் இந்தியாவுக்கு மிகுந்தஅனுபவம் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் ஒருபகுதியாக இங்குள்ள கிப்ட் சிட்டியில் முதலாவது சர்வதேச தங்கபரிவர்த்தனை மையத்தை (ஐஐபிஎக்ஸ்) பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத்துடன் இணைந்துள்ளனர். அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது.

பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகவும், சர்வதேச வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தளமாகவும் கிப்ட்சிட்டி விளங்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாமட்டுமே தரமான பொருட்களையும் சிறப்பான சேவையையும் அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கிப்ட்சிட்டி என்பது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் என்பதன் சுருக்கமாகும். நிதி சார்ந்த பொருள்கள், நிதி சேவை மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த சர்வதேச நிதிசேவை மையத்தில் (ஐஎப்எஸ்சி) செயல்படும். ஐஐபிஎக்ஸ் என்பது தங்க வர்த்தக மையமாகும். சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட இந்த மையம் உதவும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...