ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்

ஸ்டாலின் நாக்காக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்கமுடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார் பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ கஜாபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்து உள்ளனர். அதேபோல மத்திய அரசின் குழுவும் ஆய்வுசெய்து உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை மாதமாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டார். புயல் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நான்சென்றேன். 3 கட்டமாக சென்று பார்வையிட்டேன். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர், முன்னாள் தலைவர் உள்பட தலைவர்கள் சென்று பார்த்து பல கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம்.

விவசாய மக்கள், மீனவர்கள் உள்பட பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து டெல்லியில் மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத் துறை, பெட்ரோலிய துறை, நகர்ப்புற மேம்பாட்டுதுறை, வணிகத் துறை அமைச்சர்களை சந்தித்து எந்தந்த துறை முலமாக நிவாரணம் பெறமுடியுமோ அந்தமுயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். மத்திய மந்திரிகள் மனமுவந்து உதவிசெய்வதாக தெரிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய குழு ஆய்வுசெய்து அதற்கான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையை சமர்ப்பித்தும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர் தான் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை நிதித் துறை, உள்துறை, விவசாயதுறை மந்திரிகளின் கூட்டத்தின் பின்தான் முடிவு செய்வார்கள். ஒருகருத்ததை சொல்லும் போது அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பதை கணக்கில் எடுக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கபோவது பற்றி திமுக இரண்டாம் கட்டதலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்வர்கள் வரவேற்க வில்லை. புதுச்சேரி மாநில முதல்வர்தான் கைதட்டினார். ஏன் முன்மொழித்தார்கள் என்று மற்ற எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்தந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இருந்ததோ அந்த கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். கூட்டி வந்து கழுத்தை அறுத்ததாகதான் பலர் நினைக்கின்றனர். அழைக்கப்பட்டாத ஒருவரை வழிந்து அழைத்து வந்ததின் நோக்கம் என்ன? புலியை பார்த்து பூணை சூடு போட்டதாக கருதுகிறேன். கருணாநிதி சொன்னார் என்றால் அவரது தலைமை எப்படிப்பட்டது என்பது நாடுமுழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியும்.

கருணா நிதி செய்த விசயங்களை ஒப்பீட்டு நான்செய்ய போவதாக சொன்ன யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சாடிஸ்ட் என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சகோதரர்களை தேடி கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு சாடிஸ்ட் என்று சொல்லாமா?. சாடிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொலைகள் செய்த கொலைக்கார கூட்டத்தை அழைத்து வந்து பெருமைப்படுத் துவதாக நினைத்து சாடிஸ்ட் என்று பேசுகின்றார். ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்த துயர சம்பவங்களை பேசலாமா. தயவுசெய்து நாக்காக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்தி கொள்வீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...